மேலும் அறிய

ரத்தம் தானமாக பெறப்பட்ட விபரம் குறித்து தெரிவித்த தஞ்சை மாவட்ட கலெக்டர்

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10701 யூனிட்டும், அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனையில் 6767 யூனிட்டும் ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் தேசிய தன்னார்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாமினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ம் தேதி தேசிய தன்னார்வ ரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது. 2020-21ம் வருடத்திற்கான முழக்கம் ஒற்றுமையுடன் இரத்த தானம் செய்வோம், ஒருங்கிணைந்த முயற்சியுடன் உயிர்களை காப்போம் என்பது முன் வைக்கப்பட்டு ரத்ததான முகாம் மற்றும் ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் களுக்கான பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகத்தின் மூலம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் 4 அரசு ரத்த மையங்கள் உள்ளன. இதில் 2021-22ம் ஆண்டில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10701 யூனிட்டும், அரசு ராசா மிராசுதாரர் மருத்துவமனையில் 6767 யூனிட்டும், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கும்பகோணத்தில் 2774 யூனிட்டும் மற்றும் அரசு மருத்துவமனை பட்டுக்கோட்டையில் 1912 யூனிட் ஆக மொத்தம் 22154 யூனிட் கொடையாளர்களிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவர் 2021-22ம் ஆண்டில் அரசு இரத்த மையங்களுக்கு ரத்த தான முகாம் நடத்தி கொடுத்த 69 ரத்ததான முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜிநாதன், மாவட்ட திட்ட மேலாளர் ஜெனிபர் அருள் மேரி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் வேல்முருகன், மருத்துவர்கள் வரதராஜன், ராதிகா மைக்கேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.




வளர்ச்சிப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

திருவையாறு பகுதியில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவையாறு ஒன்றியம் மருவூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் (2021-2022) நடைபெற்றுவரும் ரூ.6.5 லட்சத்தில் நெல் உளர்த்தும் களம், ரூ.11 லட்சத்தில் நடைபெற்றுவரும் அங்கன்வாடி கட்டிடம், ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவிகள் கழிப்பறை 4.9 லட்சம், தொகுப்பு வீடுகள் மற்றும் தனிநபர் உறுஞ்சிகுழி அமைத்தல் பணி ஆகியவற்றை கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து வடுகக்குடி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் (2021-2022) நடைபெற்றுவரும் ரூ.3 லட்சத்தில் சிமெண்ட் சாலை பணி, ரூ.25.65 லட்சத்தில் ஊராட்சி மன்ற கட்டிடம், ரூ.13.65 லட்சத்தில் கனிம மற்றும் சுரங்க நிதியிலிருந்து கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி கட்டிடம் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை விரைவில் முடிக்க கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் காந்திமதி, ஜான்கென்னடி, ஒன்றிய பொறியாளர்கள் விஜயகுமார், மணிகண்டன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சரவணச் செல்வன், ஊராட்சித் தலைவர்கள் மணிகண்டன், விஜயபாஸ்கர், ஊராட்சி செயலர்கள் பரிமேலழகன், நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.

தலைப்பு செய்திகள்

20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Rasi Palan Today (01-08-2026): துலாமுக்கு வெற்றி.. மீனத்துக்கு லாபம்.. ஆகஸ்ட் மாதம் அதிர்ஷ்டம் யாருக்கு?
Embed widget