மேலும் அறிய

தொடர் விடுமுறை... தஞ்சையை குலுங்க விட்ட சுற்றுலாப்பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் திணறல்

பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்தனர். மேலும், பெரியகோயில் எதிரே உள்ள ராஜாளி பறவைகள் பூங்கா உள்ளிட்டவற்றிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.

தஞ்சாவூர்: தொடர் விடுமுறையால் தஞ்சாவூரே குலுங்கி விட்டது என்றுதான் சொல்லணும். அட ஆமாங்க உண்மைதான். தஞ்சாவூர் பெரிய கோயிலில் விடுமுறை நாட்கள் காரணமாக பக்தர்கள் கூட்டம் கடந்த 3 நாட்களாவே மிக அதிகமாக இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

சுற்றுலாத் தலங்களில் குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி, பள்ளி, கல்லூரிகளுக்கு அக்டோபர் 30ம் தேதி பிற்பகல் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா தலங்களில் கடந்த 2 நாட்களாக கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதேபோல, தஞ்சாவூர் பெரியகோயிலில் வெள்ளிக்கிழமை மாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்தனர். மேலும், பெரியகோயில் எதிரே உள்ள ராஜாளி பறவைகள் பூங்கா உள்ளிட்டவற்றிலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.

தொடர் விடுமுறை... தஞ்சையை குலுங்க விட்ட சுற்றுலாப்பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் திணறல்

போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த தஞ்சாவூர்

பெரும்பாலான சுற்றுலா பயணிகள் கார், வேன், பேருந்துகளில் வருவதால் பெரிய கோயில் எதிரே உள்ள வாகன நிறுத்துமிடம் வாகனங்களால் நிரம்பியது. இதனால், திலகர் திடல், சிவகங்கை பூங்கா, பழைய நீதிமன்றச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பழைய நீதிமன்ற சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

பெரிய கோயிலுக்கு அளவுக்கு அதிகமாக கூட்டம் வந்ததால் பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. காவலர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருந்ததால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். இதன் காரணமாக பெரும்பாலான வாகனங்கள் பல நிமிடங்கள் காத்திருந்துதான் நகர்ந்தன. இதனிடையே, அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு வழி ஏற்படுத்தி அனுப்புவதில் போக்குவரத்துக் காவலர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.

இன்றும் பெரிய கோயிலுக்கு ஆயிரக்கணக்கானோர் வருகை

இதேபோல, திலகர் திடல், சிவகங்கை பூங்கா, பழைய நீதிமன்றச் சாலையிலும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கூட்டம் இன்னும் அதிகமாக இருந்தது. நாளை வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இதனால் இன்று நேற்றைய நாளை விட இன்று பெரிய கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது. கோயிலில் எந்த பக்கம் பார்த்தாலும் மக்களின் தலையாகவே இருந்தது. வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து திரும்பினர் பக்தர்கள்.

வெளி மாநில சுற்றுலாப்பயணிகளும் குவிந்தனர்

தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை என பிற மாவட்ட சுற்றுலாப்பயணிகள் மற்றும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெரிய கோயிலுக்கு வந்திருந்தனர். இதேபோல் ராஜாளி பூங்காவிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் மேம்பாலம், மருத்துவக்கல்லூரி சாலை, ஆற்றுப்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் விடுமுறை முடிந்து ஊருக்கு திரும்புபவர்கள் ஒரே நேரத்தில் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் குவிந்ததால் பஸ்களில் ஏராளமான கூட்டம் தென்பட்டது, முக்கியமாக திருச்சி செல்லும் பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதேபோல் மதுரை, புதுக்கோட்டை பஸ்களிலும் மக்கள் நெரிசல் அதிகம் காணப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget