தஞ்சாவூரில் சாதனை! அனு மருத்துவமனையில் அதிநவீன MICS இதய பைபாஸ் அறுவை சிகிச்சை: கமலவேலுவின் வெற்றிக் கதை!
அனு மருத்துவமனையின் அருமையான சாதனை... அதிநவீன சிறுதுளை இதய பைபாஸ் அறுவை சிகிச்சை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அனு மருத்துவமனையில் அதிநவீன சிறுதுளை (MICS) இதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை தஞ்சை மாவட்டத்தில் இதுதான் முதல்முறை என்பதும் அதை அனு மருத்துவமனை செய்ததும் குறிப்பிடத்த்ககது.
தஞ்சாவூர் அனு மருத்துவமனையில் நோயாளிக்கு சிறுதுளை (MICS) இதய பைபாஸ் அறுவை சிகிச்சை அதிநவீன முறையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் அனு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கமலவேலு (55) அதிநவீன இதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சை மேற்கொண்டு 1 மாதத்தில் அவர் வெளிநாட்டில் அவரது வேலைக்கு சென்று நலமாக அவரது வேலையை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கமலவேலுவுக்கு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சைகள் அனைத்தும் பல இரத்தக்குழாய் இணைப்பு முறையில் மேற்கொள்ளப்பட்டன பழமையான திறந்த இதய அறுவை சிகிச்சையுடன் ஒப்பிடும்போது இந்த புதிய அதிநவீன முறை சிகிச்சையில் மார்பின் இடப்பக்கத்தில் சிறிய வெட்டின் வழியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதில் மார்பு எலும்பு வெட்டப்படாது என்பதனால் நோயாளிக்கு ஏற்படும் உடல் பாதிப்பு குறைவாகவும், குணமடையும் காலம் வேகமாகவும் அமைகிறது. நோயாளிகள் எதிர் பார்த்ததைவிட விரைவில் எழுந்து நடக்கத் தொடங்கினர். அதை நிரூபிக்கும் வகையில் கமலவேலுவும் ஒரே மாதத்தில் குணமடைந்து வெளிநாட்டில் தனது பணிக்கு திரும்பி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் வழக்கமான பைபாஸ் அறுவை சிகிச்சையை விட இயல்பு வாழ்கைக்குத் திரும்பும் நேரம் குறைவாக இருந்தது என மருத்துவமனையின் இதய - நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆஷிக் நிஹ்மத்துல்லா தெரிவித்தார். இந்த நவீன சிகிச்சை முறையில், பல இரத்த குழாய் இணைப்பு செயல்படுத்தப்பட்டதால், இதய குழாய்களில் ஏற்பட்ட பல தடைகள் ஒரே அறுவை முறையில் சரிசெய்யப்பட்டன. இது மிக நுட்பமான மற்றும் சிறந்த மருத்துவத் திறமையைத் தேவைப்படும் அறுவை செயல்முறையாகும்.
இந்த சிகிச்சையினால் மிகச்சிறிய அறுவை புண் மற்றும் குறைந்த பின் காய வலி, தோற்று நோய் அபாயம் குறைவு, குறைந்த இரத்த இழப்பு மற்றும் இரத்தம் செலுத்தும் தேவையின்மை வேகமான உடல்நல மீட்பு மற்றும் வாழ்க்கைக்குத் திரும்புதல் ஆகிய நன்மைகள் உள்ளது. இந்த சிகிச்சைகள் அனு மருத்துவமனையில் குறைந்த கட்டணத்தில் மேற்கொள்ளுவதுடன் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர்.ஆர்.வி.சிவகுமார் கூறுகையில், அனு மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சை பிரிவு, நவீன மருத்துவ முறைகளை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி நோயாளிகளுக்கு தகுந்த அக்கறையோடு தரமான சேவையை வழங்கி வருகிறது, தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்ட மக்களுக்கு உயர்தர இதய சிகிச்சைகளை குறைந்த செலவில் பெற இயலுமாறு செயற்படுவதே எங்கள் நோக்கம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற சிகிச்சைக்கு ஆகும் நேரம் மிகவும் குறைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பைபாஸ் சிகிச்சை செய்யும் போது ஏற்படும் வலி நோயாளிக்கு இதில் இருப்பதில்லை. மிகவும் குறுகிய காலத்தில் நோயாளி குணமடைந்து தனது இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விடுகிறார். மிகவும் துல்லியமான இந்த அறுவை சிகிச்சை அனு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது டெல்டா மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மிகவும் பயன் உள்ள ஒன்றாகும்.





















