மேலும் அறிய

தஞ்சாவூர்: தனிப்படை போலீசார் அதிரடி சோதனை; 1.50 டன் குட்கா, வாகனங்கள் பறிமுதல்

தஞ்சை மாவட்டம் மதுக்கூரில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 1.50 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டள்ளது. மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் குட்கா உட்பட போதை பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டு புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்ட் மதுக்கூர் பகுதியில் போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 1.50 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க டி.ஐ.ஜி., கயல்விழி உத்தரவின் பேரில், மாவட்ட எஸ்.பி., ரவளிப்ரியா அறிவுறுத்தலின் பேரில், ஏ.டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமையில் எஸ்.ஐ., அடைக்கல ஆரோக்கியசாமி டேவிட், எஸ்.எஸ்.ஐ.க்கள், கந்தசாமி, கண்ணன் மற்றும் போலீசார் இளையராஜா, சுந்தர்ராமன், ஆனந்தராஜ் தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர்: தனிப்படை போலீசார் அதிரடி சோதனை; 1.50 டன் குட்கா, வாகனங்கள் பறிமுதல்

இதன்படி, மதுக்கூர் பகுதிகளில் அதிகளவில் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மதுக்கூர் கடைவீதியில் சோதனை செய்த மளிகை கடை ஒன்றில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 50 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து மதுக்கூர் கண்ணகி தெருவை சேர்ந்த மளிகை உரிமையாளரான முருகேசன் (55), அவரது மகன் கணேசன் (29)  இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணை அடிப்படையில், பட்டுக்கோட்டை அருகே முள்ளூர் பட்டிக்காடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (40), என்பவர் மொத்தமாக குட்காவை கொள்முதல் செய்து மதுக்கூர், பட்டுக்கோட்டை சுற்று வட்டாரங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, சிவக்குமாருக்கு சொந்தமான குடோனில் போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் குடோனில் இருந்து சுற்றுப்பகுதிகளுக்கு விற்பனைக்காக இரண்டு லோடு வண்டிகளில் குட்கா ஏற்றப்பட்டு சென்றதை மடக்கிப்பிடித்தனர். வாகனங்களில் சோதனை செய்தபோது  அதில் ஒரு டன் அளவிலான குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தனிப்படை போலீசார் அதிரடி சோதனை; 1.50 டன் குட்கா, வாகனங்கள் பறிமுதல்

தொடர்ந்து போலீார், பறிமுதல் செய்த குட்காவையும், ஆலத்துார் பகுதியை சேர்ந்த லோடு வண்டி டிரைவரான பெரமையன் (40), சிவக்குமாரின் உறவினர்களான கரிகாலன் (24), குணாளன் (21) மூவரையும் கைது செய்தனர். மேலும் லாரி, லோடு வண்டி இரண்டையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய குடோன் உரிமையாளர் சிவக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்

firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி

IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்

Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்

ABP Premium

வீடியோ

Vikravandi school child Death : சிறுமி உயிரிழந்தது எப்படி? நெஞ்சை நொறுக்கும் காட்சி  கதறும் தாய்Vikravandi school child : குழந்தை உயிரிழந்த விவகாரம்”இறப்பில் சந்தேகம் இருக்கு” 3 பேர் கைது!Jagdeep Dhankhar  : ”சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க?”கொதித்தெழுந்த ஜெகதீப் தன்கர் நடந்தது என்ன?Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
DMK CPM: குழம்பும் ஸ்டாலின், தமிழ்நாட்டில் எமர்ஜென்சியா? திமுகவின் திராவிட மாடல்னா..கே. பாலகிருஷ்ணன் அட்டாக்
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
firecracker factory Blast: மீண்டும் கோர விபத்து - சாத்தூரில் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை, 6 பேர் பரிதாபமாக பலி
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
IND Vs AUS 5th Test: அதிரடி காட்டும் பும்ரா, சிராஜ்..! அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி., இந்தியா அபாரம்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
Power Outage in Tamilnadu ; தமிழகத்தில் இன்று ( 04.01.25 ) மின் தடை ஏற்படும் பகுதிகளின் லிஸ்ட்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?

Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?

யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!

Embed widget