மேலும் அறிய

தஞ்சை: எமன் வேடம் அணிந்து விழிப்புணர்வு - ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய போலீசார்

’’தஞ்சாவூர் மாவட்டத்தில் தினந்தோறும் 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது’’

தஞ்சாவூரில் ஹெல்மேட் விழிப்புணர்வு நிகழ்ச்சி, பெரியகோயில் முன்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்பி ரவளிப்பிரியாகாந்த புனேனி தலைமை வகித்து, ஹெல்மேட் அணியாமல் சென்றவர்களுக்கு இலவசமாக ஹெல்மேட் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டிஎஸ்பி கபிலன், போக்குவரத்து காவல் துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் எஸ்பி ரவளிப்பிரியாகாந்த புனேனி, சாலையில் ஹெல்மேட் அணியாமல் வந்தவர்களுக்கு, அபராதம் விதிக்க உத்தரவிட்டு, அவர்களுக்கு இலவசமாக ஹெல்மேட்டுக்களை வழங்கினார். அதே சாலையில், இரண்டு சக்கர வாகனத்தில் ஹெல்மேட் மற்றும் முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு சாக்லேட் வழங்கி, இரு கைகளை கூப்பி நன்றி கூறினார்.

தஞ்சை: எமன் வேடம் அணிந்து விழிப்புணர்வு - ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய போலீசார்

அப்போது அவர்களிடம்,  அரசு கூறும் விதிமுறைகள் பின்பற்றி நடந்து கொள்வதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதே போல் வாகனம் ஒட்டும் போது, ஹெல்மேட் அணிந்து ஒட்ட வேண்டும், கட்டாயம் முககவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று கைகளை கூப்பி மீண்டும் நன்றியை தெரிவித்தார். அதே சாலையில், காரில் வந்தவர்களில், முன்புறம் டிரைவர் சீட்டின் அருகில் உள்ளவர், சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்ததால்,அவருக்கு, அபராதம் விதிக்க எஸ்பி உத்தரவிட்டார். அப்போது, பின்புறம் வந்த காரில், டிரைவர் சீட்டின் அருகில் அமர்ந்திருந்த சிறுவன், முககவசம் அணிந்து, சீட் பெல்ட் அணிந்திருந்தான். இதனை கவனித்த எஸ்பி, உடனே, காரை நிறுத்த சொல்லி, அந்த சிறுவனுக்கு சாக்லேட் வழங்கி, நன்றி தெரிவித்தார். மேலும், பொது மக்களிடையே ஹெல்மேட் அணிந்து வாகனத்தை ஒட்டுவது, சீட் பெல்ட் அணிந்து கார்களை ஒட்டுவது குறித்து, எமதர்மராஜாவை போல் ஒருவர் வேடமிட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது எஸ்பி ரவளிப்பிரியாகாந்த புனேனி கூறுகையில்,

தஞ்சை: எமன் வேடம் அணிந்து விழிப்புணர்வு - ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு இனிப்பு வழங்கிய போலீசார்

இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து ஒட்ட வேண்டும். அவரது பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அதிக வேகத்துடன் சென்றால் விபத்து ஏற்படும். அதனால் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்க கூடாது. கார்களில் பயம் செய்யும், டிரைவர் மற்றும் அவரது அருகில் இருப்பவர்கள், கட்டாயம் சீட்பெல்ட் அணிந்திருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியில் வரும் போது. பாதசாரிகள், இரண்டு சக்கர வாகன ஒட்டிகள், கார்களில் வருபவர்கள் அனைவரும் கட்டாய மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறாமல் வாகனத்தை இயக்க வேண்டும். அரசு கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றி, விபத்தில்லாமல் வாழ வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் தினந்தோறும் ஹெல்மேட் அணியாமல் சென்றவர்கள், தலையில் அடிபட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஹெல்மேட் அணிந்து செல்வதால், அவர்களது குடும்பத்தினருக்கு நல்லது. அனைவரும் பின்பற்ற வேண்டும். தஞ்சாவூர் மாவட்டத்தில் தினந்தோறும் 800 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.  எனவே, இது போன்ற நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TN BJP LEADER : ’அண்ணாமலையை தூக்குங்க’’கண்டிசன் போட்ட EPS..நயினாருக்கு அடித்த JACKPOTVarunkumar vs Seeman : ”கொஞ்ச நஞ்ச பேச்சா..” சீமானை சீண்டும் வருண்குமார்? முற்றும் மோதல்!Vengaivayal Issue | Kabbadi Players: தமிழக வீராங்கனைகளுக்கு அடி தூக்கி வீசப்பட்ட Chair! எல்லைமீறிய வட இந்திய நடுவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
நாளுக்கு நாள் முற்றும் மோதல் போக்கு: ஆளுநர் தேனீர் விருந்தை புறக்கணித்த தமிழக அரசு!
TVK Vs DMK: பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல.? திமுக தலைமைக்கு குடைச்சல் கொடுக்கும் விஜய்யின் ஸ்கெட்ச்...
Republic Day 2025: குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
குடியரசு தினம் கொண்டாடுறீங்களே, இந்த தகவல் எல்லாம் உங்ளுக்கு தெரியுமா.?
HC Orders TN Govt.: பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
பேருந்து கட்டண உயர்வு.. அரசுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
குடிகாரர்களை கட்டிக்கொண்டதற்கு இதுவே மேல்! – இரண்டு பெண்கள் எடுத்த அதிரடி முடிவு!
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
சீமான் ஏன் இப்படி பண்றாரு? அவருக்கு நல்லதல்ல; அரசு இங்க நிற்கணும் - எச்சரித்த திருமாவளவன்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
Vengaivayal : ” பொய் பரப்பாதீங்க” வேங்கை வயல் விவகாரம்.. தமிழக அரசு வேண்டுகோள்
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
750 நாட்கள் ஆச்சு! அவசர அவசரமாக குற்றப்பத்திரிகை ஏன்? – திருமாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அண்ணாமலை
Embed widget