மேலும் அறிய

200க்கும் அதிகமான விருதுகள்... வியக்க வைக்கும் தஞ்சை சிங்கப் பெண்

கின்னஸ் சாதனை உட்பட பல சாதனைகள் செய்து 200க்கும் அதிகமான விருதுகளை குவித்து தஞ்சை பெருமையின் மணிமகுடத்தில் வைரமாக ஜொலித்து வருகிறார் நடன கலைஞர் டாக்டர் தனலட்சுமி என்கிற மானஸா.

தஞ்சாவூர்: கின்னஸ் சாதனை உட்பட பல சாதனைகள் செய்து 200க்கும் அதிகமான விருதுகளை குவித்து தஞ்சை பெருமையின் மணிமகுடத்தில் வைரமாக ஜொலித்து வருகிறார் நடன கலைஞர் டாக்டர் தனலட்சுமி என்கிற மானஸா.

அவமானங்களை புறந்தள்ளுங்கள்

அடுக்கடுக்காய் வந்த அவமானங்களை புறந்தள்ளி, அவற்றையே படிக்கட்டுகளாக மாற்றி மிடுக்கான தன், தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் அசைத்து பார்க்க நினைத்த சொல் அம்புகளை மலர்மாலைகளாக மாற்றி சாதனை என்ற வலுவான ஆணிவேரை அழுத்தமாய் பதித்து இன்று யாருக்கும், எதற்கும் தலை வணங்காமல் வான் நோக்கி கம்பீரமாக தன் உழைப்பு மற்றும் திறமையால் 200க்கும் மேற்பட்ட விருதுகளையும், சான்றிதழ்களையும் குவித்து பாராட்டுகளை புன்னகையுடன் ஏற்று கொண்டு வருகிறார் தனலட்சுமி. இவரை தஞ்சை மானஸா என்றால்தான் அனைவருக்கும் நன்கு பரிட்சயம்.

200க்கும் அதிகமான விருதுகள்... வியக்க வைக்கும் தஞ்சை சிங்கப் பெண்

கின்னஸ் சாதனை உட்பட ஏராளமான சாதனைகள்

ஓரிரு சாதனைகள் அல்ல. ஏராளமான சாதனைகளில் கின்னஸ் சாதனையும் ஒன்று. தஞ்சை மானஸா வாங்கி குவித்துள்ள விருதுகள், சான்றிதழ்கள், கேடயங்கள், மெடல்கள் என அனைத்தையும் வைக்க ஒரு தனி வீடே வேண்டும் போல். வரிசையாக சான்றிதழ்கள் அணிவகுக்க, சரம் சரமாக மெடல்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இசைக்க சுற்றிலும் கேடயமும், விருதுகளும் வரிசைக்கட்டி நிற்கின்றன. யார் இந்த தஞ்சை மானஸா. முயற்சி செய்தால் வானமும் வசப்படும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

நடன உடற்பயிற்சி அளிக்கும் தஞ்சை மானஸா

தஞ்சை மானஸா என்கிற தனலட்சுமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக நடன உடற்பயிற்சியை அளித்து வரும் நடன கலைஞர். அதுமட்டுமல்ல பல்வேறு ஈவெண்ட்களை நடத்தி வருகிறார். மேலும் தன்னம்பிக்கை ஊக்கப்படுத்தும் விதமாக இலவச வகுப்புகளையும் நடத்துகிறார். நடன உடற்பயிற்சியை கடந்த 15 வருடங்களாக மிகச் சிறப்பாக கற்றுக் கொடுத்து வருகிறார். 

முதல் விருது லதா ரஜினியிடம் பெற்றார்

2001 ல் லதா ரஜினிகாந்த்திடம் இருந்து சில்வர் மெடல் பாராட்டுதான் இவரது சாதனைகளின் ஆரம்பப்புள்ளி. அன்று கிடைத்த ஊக்கம் இன்று வரை நீண்டு கிடக்கும் நெடுஞ்சாலை போல் விருதுகள் வரிசை கட்டி நிற்கின்றன. கலாம் உலக சாதனை புத்தகத்தில் உலக சாதனையாளர் என்று சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். கின்னஸ் உலக சாதனையிலும் தடம் பதித்து அதற்கான அங்கீகார சான்றிதழையும் பெற்றுள்ளார். 200 படங்களின் தலைப்புகளை வைத்து கவிதை எழுதியதற்காக கின்னஸ் ரெக்கார்ட் படைத்துள்ளார். 

மாணவர்களின் திறமைகளை உலகறிய செய்தல்

மேலும் சிங்கப்பெண்  விருது, Doctor of Business ; women empowerment award, Dr. APJ அப்துல் கலாம் விருது; best professional award ; best aerobic Trainer ; கவிபாரதி  விருது ; பன்முக பாவை விருது ; அன்னை தெரசா விருது ; கல்பனா சாவ்லா விருது போன்றவைகள் இவர் வாங்கி குவித்த விருது என்ற வைரங்களில் சில. மேலும்  ஐ நா பாதுகாப்பு மற்றும் மனித உரிமை அமைப்பில் மாவட்ட தலைவராகவும் உள்ளார்.  மேலும் பல்வேறு திறமைகள் உள்ள மாணவர்களை கண்டறிந்து அந்த மாணவர்களின் திறமைகளை உலக அறிய செய்து உலக சாதனையாளராகவும் மாற்றி வருகிறார். இவை அனைத்தும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பால் தனி ஒரு பெண்ணாக இருந்து திறமைகளை கண்டறிந்து உலக அறிய செய்யும் ஆசானாகவும் தஞ்சையின் முக்கிய ஒரு பிஸினஸ் வுமனாகவும் தடம் பதித்திருக்கிறார்.

தனித்திறமைகளை ஊக்கப்படுத்தும் போட்டிகள்

மாணவ, மாணவிகளுக்கு இருக்கும் தனித்திறமையை விளையாட்டு, படிப்பு, ஆன்மீகம் எதுவாயினும் வயது வரமின்றி பங்கேற்க செய்து குழுவாக உலக சாதனை படைக்க வாய்ப்பினை தேடி தருவதோடு தன்னம்பிக்கை தான் முதலில் என்று மனதை தயார்படுத்தி மாணவர்களின் மற்றொரு ஆசானாகவும் திகழ்ந்து வருகிறார்.

பெண்களுக்கு நடன உடற்பயிற்சி அளிக்கிறார். இதை தினசரி 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் உடல் மற்றும் மூளை புத்துணர்வுடனும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் மன ஆரோக்கியம், உடற்பயிற்சி செய்தால் பதற்றத்தின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். மனம் அமைதியாய் இருக்கும். இதனால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கவலைகள் நீங்கும்.  மேலும் தைராய்டு, மாதவிடாய் கோளாறுகள், தூக்கமின்மை போன்றவற்றிற்கு இந்த நடன உடற்பயிற்சி சிறந்த ஒன்றாக உள்ளது என்று நிரூபித்து காட்டியுள்ளார் தஞ்சை மானஸா. 

200க்கும் அதிகமான விருதுகள்... வியக்க வைக்கும் தஞ்சை சிங்கப் பெண்

பல்வேறு ஈவெண்ட்களை நடத்தி உள்ளார். முக்கியமாக குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் ஆர்வத்தை ஊக்கப்படுத்தும்விதமாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ் கணக்கு நூல்  போன்ற நூல்களையும் மற்றும் திருக்குறள் மற்றும் கவிதைகள் குறிப்பிட்ட நேரத்தில் ஒப்புவித்தல் போட்டிகளை நடத்தி வருகிறார், மேலும் அவரவருக்கு இருக்கும் தனித்திறமையை விளையாட்டு, கல்வி, ஆன்மீகம் எதுவாயினும் வயது வரம்பின்றி பங்கேற்க செய்து அவர்களுக்கு குழுவாக உலக சாதனை படைக்க வாய்ப்பினை தேடி தருவதோடு தன்னம்பிக்கை தான் முதலில் என்று அவர்களை தயார்படுத்தி வருகிறார் தஞ்சை மானஸா.

மஞ்சப்பை வடிவில் நின்று சாதனை படைத்தல்

தஞ்சை மாநகராட்சி இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மீண்டும்  மஞ்சப் பை என்ற தலைப்பில் மஞ்சப் பை வடிவில் 1000 மேற்பட்ட பொதுமக்கள், மாணவர்கள் பங்கேற்க மேயர் ஆணையர் மத்தியில் கலாம் உலக சாதனையை நிறைவேற்றியுள்ளார். தமிழ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து சரபோஜி கல்லூரி, குந்தவை நாச்சியார் கல்லூரி மாணவ, மாணவிகள்,தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாரத் கல்வி குழும மாணவர்கள் கலந்து கொண்ட தமிழ் ஓவிய கழுகு பார்வை உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தி உள்ளார். ஊனமுற்றோர் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நோட்டுகள், புத்தகங்கள் வழங்குதல் என சிங்கப்பெண்ணாக தடைகளை கடந்து வெற்றிகளை குவித்து வருகிறார் தஞ்சை மானஸா. தன்னம்பிக்கை தான் மூலதனம்... கனவுகளை நிஜமாக்க முயன்றால் போதும் என்கிறார் விருதுகளை குவித்த இந்த சாதனை பெண். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget