மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கோடை மழை... ஆட்டுக்கிடை அமைத்தவர்கள் பரிதாப நிலை

கோடை மழையின் காரணமாக கோடையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, எள், கடலை, பருத்தி ஆகிய பயிர்களுக்கு மிகுந்த பயன்உள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை கொட்டி தீர்த்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். முக்கியமாக கடந்த 10 நாட்களாக இருந்து வந்த வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் உருவானது. இருப்பினும் அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டுக்கிடை அமைத்து இருந்தவர்கள் மட்டும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று காலை பரவலாக இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகமாக இருந்ததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். இதனால் இளநீர், பதநீர், நுங்கு, வெள்ளரி, குளிர்பானங்கள் விற்பனை அமோகமாக நடந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி காலை வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கோடையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், உளுந்து, எள், கடலை, பருத்தி ஆகிய பயிர்களுக்கு மிகுந்த பயன்உள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு வருமாறு: பேராவூரணி 63 மி.மீட்டர், ஒரத்தநாடு 54, பூதலூர் 51, வல்லம் 45, மதுக்கூர் 45, வெட்டிக்காடு 44, அய்யம்பேட்டை 38, திருவையாறு 31, பாபநாசம் 29, அணைக்கரை 20, திருக்காட்டுப்பள்ளி 19, தஞ்சாவூர் 19,  கல்லணை 17, குருங்குளம் 12, நெய்வாசல் 12,  அதிராம்பட்டினம் 11, கும்பகோணம் 8, திருவிடைமருதூர் 6, மஞ்சளாறு 6 என மாவட்டம் முழுவதும் மழை பதிவாகியுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் அறுவடை முடிந்த வயல்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வந்து ஆட்டுக்கிடை போட்டுள்ளனர். விளைநிலங்களின் மண் வளத்தை அதிகரிக்கவும், இயற்கை உரம் மூலம் மகசூலை உயர்த்தவும் அறுவடை முடிந்த வயல்களில் ஆட்டுக்கிடை அமைத்தல் ஒரு சிறந்த பாரம்பரிய முறையாகும். ஆடுகள் இரவு நேரத்தில் வயல்களில் தங்கி, புழுக்கை மற்றும் சிறுநீர் கழிப்பதன் மூலம், நிலத்திற்குத் தேவையான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் இயற்கையாகக் கிடைக்கின்றன. பொதுவாக செம்மறி ஆடுகள் இதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆட்டு உரிமையாளர்கள் வயல்வெளிகளில் சிறு குடில் அமைத்து தங்கி, ஆடுகளைக் காவல் காப்பார்கள். இந்த முறையால் மண் வளத்தைப் பேணிக்காத்து, கூடுதல் மகசூல் பெற உதவுகிறது.

அவ்வாறு ஆட்டுக்கிடை அமைத்து இருந்தவர்கள் இந்த கனமழையால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் இடி, மின்னல் ஆகியவற்றால் ஆடுகள் மிரண்டு பட்டிக்குள் ஓடியபடியே இருந்ததால் ஆட்டுக்கிடை அமைத்து இருந்தவர்கள் அவதியடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget