Pugar Petti: பேருக்கு பள்ளிக்கூடம் இருக்கு! வகுப்பறைகள் எங்கே...! புங்கனூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியின் அவலநிலை!
மயிலாடுதுறை அருகே போதிய வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியிலும் ஒரே வகுப்பில் பல மாணவர்கள் அமரும் அவலநிலை நிலவிவருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலை அடுத்த புங்கனூரில் செயல்பட்டு வருகிறது ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இங்கு புங்கனூர் சுற்றுவட்டார பகுதிகளான மல்லுக்கடி, காடக்குடி, வரவுகுடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஏழை எளிய கூலி விவசாய தொழிலாளர்களின் குழந்தைகள் சுமார் 200 பேர் 1 முதல் 8 வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு வகுப்பறை கட்டிடங்களாக நான்கு கட்டிடங்களில் 8 வகுப்பு அறைகளில் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயின்று வந்தனர். இந்த சூழலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த இரண்டு வகுப்பறை கட்டிடம் இடிக்கப்பட்டு 8 வரை வகுப்புகள் 6 வகுப்பறையில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் நெல்லையில் பள்ளி ஒன்றின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் பலியானதை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் கட்டிடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பு அற்ற கட்டிடங்களை இடிக்க அரசு உத்தரவிட்டது. அதனையடுத்து இப்பள்ளில் நான்கு வகுப்புகள் கொண்ட இரண்டு கட்டிடங்கள் மாணவர்கள் அமர்ந்து கல்வி பயில தகுதி இல்லை என கண்டறியப்பட்டு ஒரு கட்டிடம் இடிக்கப்பட்டு, மற்றோரு கட்டிடத்தில் மாணவர்களை அனுமதிக்காமால் இருந்து வருகிறது.
இதனால் சுமார் 200 மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் தலைமையாசிரியர் அறை மற்றும் ஒரு வகுப்பறை மட்டுமே உள்ளதால் மாணவர்கள் வகுப்பு வாரியாக அமர்ந்து கல்வி பயில முடியாத நிலையில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரையும் ஒன்றாக அமர வைத்து கல்வி பயின்று வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு அவர்கள் வகுப்பு சார்ந்து தனி தனியாக பாடம் நடத்த முடியாத சூழல் நிலவி வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி மிகவும் பாதிப்படைந்து.
தமிழகத்தில் தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் அதிக நிதியாக 36 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அரசு பள்ளியில் மாணவர்கள் அமர்ந்து படிக்க வகுப்பறை இல்லாத அவலம் நிலவிவருகிறது. இது சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கொரோனா பாதிப்புக்கு பின் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து அரசுப்பள்ளிகளை மக்கள் நாடும் ஊழல் தற்போது ஏற்பட்டு இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ள நிலையில் இதுபோன்று போதிய வகுப்பறைகள் இன்றி கல்வி பாதிக்கும் சூழல் மாணவர்களுக்கு ஏற்பட்டால் மீண்டும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளிலேயே சேர்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இதனை அரசு உடனடியாக கவனத்தில் கொண்டு போதிய வகுப்பறைகள் இல்லாத பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் விரைவாக கட்டிடங்களை கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.