மேலும் அறிய

ஹாய் ஸ்டூடண்ட்ஸ்... இந்தாண்டு காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா..?

முழு ஆண்டு தேர்வு 2026 ஏப்ரல் 10ம் தேதி தொடங்குகிறது. அதே ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஆகும். ஏப்ரல் 25ம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான கோடை விடுமுறை காலம் தொடங்குகிறது.

தஞ்சாவூர்: ஹாய் ஸ்டூடண்ட்ஸ்... இந்தாண்டு உங்களுக்கு எப்போ காலாண்டு தேர்வு தெரியுங்களா. அட என்னங்க ஸ்கூல் திறந்து 15 நாட்கள் கூட ஆகலை. அதுக்குள்ள காலாண்டு தேர்வா என்று பீதியாக வேண்டாம். இன்னும் 3 மாதம் இருக்குங்க.

பள்ளிகளுக்கான கல்வியாண்டு நாட்காட்டியை ஆண்டுதோறும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டு வருவது வழக்கம். அதன்படி நடப்பு 2025-26ம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதில், பள்ளியின் வேலை நாட்கள், பொது விடுமுறை, காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள், ஆசிரியர் பயிற்சி, உயர்கல்வி வழிகாட்டி முகாம் உட்பட பல்வேறு தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அதில், 2025-26ம் கல்வியாண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 210 நாட்கள் பள்ளி வேலை நாட்களாக இருக்கும். 2025-26ம் கல்வியாண்டில் மொத்தம் 21 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. மேலும் காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது என்று தெரியுமா?  எத்தனை நாட்கள் விடுமுறை என்று தெரியுங்களா. 1 முதல் 12-ம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வரும் செப்டம்பர் 18ம் தேதி தொடங்கி செப்டம்பர் 26ம் தேதி முடிவடைகிறது.

பின்னர் செப்டம்பர் 27 சனிக்கிழமை முதல் அக்டோபர் 5ம் தேதி வரை காலாண்டு விடுமுறை வருகிறது. மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறையில் ஆயுத பூஜை, விஜய தசமி மற்றும் காந்தி ஜெயந்தி வருகிறது. 1முதல் 12-ம் வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் 15ம் தேதி முதல் டிசம்பர் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. டிசம்பர் 24ம் தேதி முதல் 2026ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி வரை மொத்தம் 12 நாட்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை வருகிறது. இதில், கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு வருகிறது.

நடப்புக் கல்வியாண்டில் முக்கியமான முழு ஆண்டு தேர்வு 2026 ஏப்ரல் 10ம் தேதி தொடங்குகிறது. அதே ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி இந்த கல்வியாண்டின் கடைசி வேலை நாள் ஆகும். ஏப்ரல் 25ம் தேதி முதல் அடுத்த ஆண்டுக்கான கோடை விடுமுறை காலம் தொடங்குகிறது.

தோல்வியை கண்டு துவளாமல் பொறுமையை கடைப்பிடித்தால் உயர்ந்த வெற்றி நிச்சயம் வந்து சேரும். தோல்வி என்பது வட்டமல்ல அதிலேயே சுழன்று கொண்டு இருப்பதற்கு. சிகரம் போல் வெற்றி இருக்கும் போது வட்டம் பற்றிய கவலை எதற்கு. விடா முயற்சியும், விடாத திறமையும்தான் வெற்றியை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் படிக்கட்டுகள். எத்தனை படிக்கட்டுகள் ஏறுகிறோம் என்பது பற்றி கணக்கில்லாமல் வெற்றியை நோக்கி புலி போன்ற பாய்ச்சல் காட்டினால் வெற்றி என்ற இனிய கனியை பெற முடியும்.

கடினமாக உழைத்தவர்கள் தோல்வியை சந்தித்தாலும் வெற்றியை பெற்றே இருக்கின்றனர். கவனமும், நம்பிக்கையும், முயற்சியும், திறமையும் தோல்வி என்ற பெருங்கடல் சூழ்ந்து நின்றாலும் ஆழ்கடலில் உள்ள வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். அந்த நாள் வெற்றியின் திருநாளாக அமையும் அமைகிறது. உயர பறக்க இறக்கைகள் மட்டும் போதாது. ஒரே ஒரு லட்சியம் என்ற குறிக்கோளை அடையும் தன்னம்பிக்கை என்ற உறுதி இருக்க வேண்டும். அந்த உறுதியை மனதில் நிறுத்தி வானில் உயரே, உயரே பறக்கும் பருந்தாக இருக்கும் மாணவர்களே. இன்னும் 3 மாதம் இருக்கிறது காலாண்டு தேர்வுக்கு. நன்கு படித்து முன்னேற வேண்டும். தேர்வை அருமையாக எழுதி லீவை கொண்டாடுங்கள். இப்போ படிக்க ஆரம்பியுங்கள்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர், கும்பகோணம் சுற்றுவட்டாரங்களில் வெளுத்து வாங்கிய திடீர் மழை: நனைந்து கும்மாளமிட்ட பள்ளி மாணவிகள்
தஞ்சாவூர், கும்பகோணம் சுற்றுவட்டாரங்களில் வெளுத்து வாங்கிய திடீர் மழை: நனைந்து கும்மாளமிட்ட பள்ளி மாணவிகள்
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
TN Weather News: காற்றழுத்த தாழ்வு நிலை.. தமிழ்நாட்டில் இன்று வெளுக்கப்போகும் கனமழை.. எங்கு?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
Embed widget