(Source: ECI/ABP News/ABP Majha)
மீட்கப்பட்ட மரகத லிங்கத்தை கோயில் நிர்வாகத்திடம் வழங்க வேண்டும் - தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள்
திருக்குவளை மரகதலிங்கத்தை ஆலய நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வருக்கு தருமபுரம் ஆதீனம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முசுகுந்த சக்கரவர்த்தியால் பெறப்பட்ட சப்த விடங்க ஸ்தலங்களில் லிங்கங்கள் எனப்படும் ஏழு லிங்கங்கள் திருக்குவளை, நாகப்பட்டினம், வேதாரண்யம், திருநள்ளாறு உள்ளிட்ட ஆலயங்களில் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2016- ஆம் ஆண்டு திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோயில் வைத்து பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் திருடப்பட்டது. இதன் மதிப்பு 500 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.
வெளியானது தீ கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக்
இதுகுறித்து சிலை தடுப்பு காவல் துறையினர் தீவிர புலன் விசாரணை செய்யப்பட்டதில், தஞ்சையைச் சார்ந்த ஒருவரது வங்கி லாக்கரில் மரகத லிங்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் திருடப்பட்ட மரகத லிங்கம் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பல நூறு ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த லிங்கம் அவனிவிடங்கர் என்று அழைக்கப்படுகிறது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்குவளை ஆலயத்தில் இருந்து திருடப்பட்ட இந்த லிங்கத்தை மீண்டும் திருக்குவளை ஆலயத்திற்கு வழங்க வேண்டும் என்று தருமபுர ஆதீனம் 27- வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
New Year 2022: பிறந்தது 2022 புத்தாண்டு... வாழ்த்துகளை வாரி இறைக்கும் திரை பிரபலங்கள்...!
சிலை தடுப்பு டிஐஜி இந்த லிங்கம் திருக்குவளை ஆலயத்திற்கு சொந்தமானது என்பதை தங்களிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டதாகவும், இந்த லிங்கத்தை தங்களிடம் ஒப்படைத்து நித்திய பூஜைக்கு வழிவகை செய்யவேண்டும் என்று தருமபுரம் ஆதீனம் விடுத்துள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.
சேம் பிஞ்ச் சட்டை, சீக்ஸில் முத்தம்: புத்தாண்டைக் கொண்டாடிய பிரியங்கா- நிக் ஜோனாஸ்
இந்நிலையில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு கண்காணிப்பாளர் பொன்னி ஐபிஎஸ், கூடுதல் கண்காணிப்பாளர்கள் ராஜாராமன், அசோக் நடராஜன் ஆகியோர் தருமபுரம் ஆதீனகர்த்தரை சந்தித்தனர். அப்போது போலீசார் தாங்கள் கொண்டு வந்திருந்த மரகத லிங்கத்தின் புகைப்படத்தை தருமபுரம் ஆதீன மடத்தில் உள்ள தொலைந்து போன மரகத லிங்கத்தின் படத்துடன் ஒப்பிட்டு பார்த்து உறுதி செய்து கொண்டனர். தொடர்ந்து, இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்து விரைவில் சிலைகளை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றனர்.
குழந்தைகளுக்காக வாங்கிய பிரேக்ஃபாஸ்ட் பாக்ஸில் போதைப் பொருள் - பதறிய பெற்றோர்!
ABP நாடு செய்திகளை Goole News - ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்