மேலும் அறிய

தொடர்ந்து 2வது நாளாக மழை... விடுமுறை நாளிலும் வீட்டில் முடங்கிய மக்கள்

தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.   முகூர்த்த தினம் என்பதால் உறவினர்களின் திருமணத்திற்கு புறப்பட்ட மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.  

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை சம்பா, தாளடி பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மழை பெய்து வரும் நிலையிலும் ஆலக்குடி, கல்விராயன்பேட்டை பகுதியில் விவசாயிகள் நாற்று நடும் பணி மற்றும் உரம் தெளிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து நேற்று முதல் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை முதலே தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு,  அம்மாபேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.   முகூர்த்த தினம் என்பதால் உறவினர்களின் திருமணத்திற்கு புறப்பட்ட மக்கள் காலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சிரமத்திற்கு உள்ளாகினர்.  

ஆலக்குடி, வல்லம், சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, கள்ளப்பெரம்பூர், ராயந்தூர் உட்பட பல பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பல பகுதிகளில் விவசாயிகள் நாற்று விட்டுள்ளனர். சில விவசாயிகள் பாய் நாற்றங்கால், நாற்று பறித்து நடுதல் உட்பட பல பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிலர் 40 நாட்கள் கடந்த நாற்றுகள் நன்கு வளர்ந்து வருவதால் உரம் தெளிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை இந்த பயிர்களுக்கு நன்கு உதவும் என்று விவசாயிகள் தரப்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒரு சில பகுதிகளில் தற்போதுதான் நாற்றுகள் நட்டுள்ளனர். இந்த இளம் நாற்றுகள் தொடர்ந்து மழை பெய்தால் வயலில் தண்ணீர் தேங்கி அழுகிவிடும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் தஞ்சை நகர் பகுதி, கரந்தை, பள்ளிஅக்ரஹாரம், புதிய பேருந்து நிலையம், நாஞ்சிக்கோட்டைசாலை, வல்லம், மாரியம்மன் கோவில், அம்மாபேட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மதியம் 1 மணி முதல் ஒரு மணிநேரம் கனமழை பெய்தது. பின்னர் சற்று மழை நின்றது. பின்னர் மாலையில் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விடுமுறை தினத்தில் வெளியில் எங்கும் செல்ல முடியாமல் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

ஆலக்குடி உட்பட சில பகுதிகளில் முன்கூட்டியே நாற்று நட்ட விவசாயிகள் தற்போது வயல்களில் களை பறித்தல் பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்யும் மழையால் சம்பா, தாளடி பயிர்கள் நன்கு வளர்ந்து வருகிறது. மேலும் மாவட்டம் முழுவதும் உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறுவை சாகுபடி எவ்வாறு இலக்கை மிஞ்சி நடந்ததோ அதேபோல் தற்போது 3.40 லட்சம் ஏக்கரை விட சம்பா, தாளடி மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் தற்போது 2.75 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Embed widget