மேலும் அறிய
Advertisement
அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி திருவாரூர்மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் போராட்டம்
’’முன்னதாக மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது’’
திருவாரூரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நம்பி திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மற்றும் காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்கு தினமும் வந்து செல்கின்றனர். குறிப்பாக ஒரு நாள் ஒன்றுக்கு ஆயிரம் வெளி நோயாளிகளும் 500க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறை காரணமாக சிறிய சிறிய சிகிச்சைக்கு கூட தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப் படுவதாக தொடர்ந்து நோயாளிகளும் நோயாளிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்திலேயே கழிவுகளை கொட்டுவதால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதாகவும் மருத்துவமனைக்கு வரக்கூடிய பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை இருதய நோய் பிரிவு, சிறு நீரக பிரிவு, புற்று நோய் பிரிவு போன்றவற்றை தொடங்க வேண்டும். அனைத்து பிரிவு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குடிநீர், பொது கழிவறை வசதிகளை மேம்படுத்தி தரவேண்டும். சுகாதார சீர்கேடுகளை கலைந்திட வேண்டும். அதிகரித்து வரும் லஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலியுறுத்தி மாதர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையை முற்றுகையிட்டு நடைபெற்ற போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் கோமதி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாணவர் சங்க மாநில துணை செயலாளா பிரகாஷ், வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சலாவுதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மருத்துவக்கல்லூரி முதல்வர், கண்காணிப்பாளர், மருத்துவர்கள் ஆகியோரின் செல்போன் எண்களை பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். மருந்து, மாத்திரை ஊசி தட்டுபாடுகளை போக்கிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பி முறறுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் போராட்ட குழுவினரோடு பேச்சு வார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. முன்னதாக மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நுழைய முயன்றவர்களை காவல் துறையினர் தடுத்தனர். அப்போது போராட்டக்குழுவினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது தடைகளை கடந்து போராட்டம் நடைபெற்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பினை ஏற்படுத்தியது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வணிகம்
தொழில்நுட்பம்
நிதி மேலாண்மை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion