மேலும் அறிய

என்னங்க இது... கூட்டமே இல்லை: பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில் ஆவேசப்பட்ட பிரேமலதா விஜயகாந்த்

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றுதான் எங்கள் கொள்கை எங்கள் ஒரே இலக்கு வெற்றி. நாங்கள் எங்கு கூட்டணி அமைக்கிறோமோ அங்கு தான் வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும்.

தஞ்சாவூர்: கூட்டம் இல்லாமல் நடத்திய முதலும் கடைசியுமான ஆலோசனை கூட்டம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளை கடுமையாக சாடினார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. இது நேற்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடந்துள்ளது.

தேமுதிக பூத் கமிட்டி கூட்டத்திற்கு போதிய நாட்கள் வராததால் ஆத்திரமடைந்த பிரேமலதா விஜயகாந்த் கூட்டம் இல்லாமல் நடத்திய முதலும் கடைசியும் கூட்டமாக இதுவாகத்தான் இருக்க வேண்டும் என ஆத்திரத்துடன் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில் பிரேமலதா ஆவேசமாக பேசினார். 

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தஞ்சை, ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தேமுதிக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகளவு கட்சி தொண்டர்கள் கலந்து கொள்ளவில்லை. இதை பார்த்து பிரேமலதா விஜயகாந்த் கடும் கோபத்தில் ஆழ்ந்து விட்டார். பின்னர் அவர் ஆவேசமாக பேசியதாவது:

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி ஒன்றுதான் எங்கள் கொள்கை எங்கள் ஒரே இலக்கு வெற்றி. நாங்கள் எங்கு கூட்டணி அமைக்கிறோமோ அங்கு தான் வெற்றி பெற்ற ஆட்சி அமைக்கும். துணிந்தவனுக்கு எதுக்கும் பயமில்லை. உலகமே ஒருவரை அன்னதான பிரபு என்று கூறுவது கேப்டன் விஜயகாந்த்தை மட்டும்தான். ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று திட்டத்தை அப்போதே சொன்னவர் நமது கேப்டன்தான்.

டெல்டா மாவட்டத்தில் கூட்டம் இல்லாமல் நடத்திய முதலும், கடைசி கூட்டமாக இதுதான் இருக்க வேண்டும். அப்படிதான் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபத்தில் 500 பேர் அமர்ந்திருக்கிறீர்கள். மாவட்ட செயலாளரிடம் கேட்டபோது திங்கட்கிழமை வேலை இருக்கும் என்பதால் கூட்டத்திற்கு வரவில்லை என்று சொல்கிறார்.

நாங்கள் வேலையில்லாமல் வந்திருக்கிறோமா. வந்தவர்களுக்கு தான் வேலை இல்லையா என கேள்வி கேட்ட அவர் பள்ளி மாணவர்களை போல் உடல்நிலை சரியில்லை விடுப்பு எடுத்துக் கொள்கிறேன் என்பது போல் உள்ளது.  அழைப்பிதழில் பெயர் இல்லை என்றால் எவ்வளவு கோபப்படுகிறீர்கள்? பெயர் சின்னதாக உள்ளது என்றால் எவ்வளவு கோபப்படுகிறீர்கள் நிர்வாக பொறுப்பு மட்டும் வாங்கிக் கொண்டால் பத்தாது பணியாற்ற வேண்டும் என படபடவென்று ஆவேசத்துடன் பேசினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், அழைப்பிதழை கையில் எடுத்து பாருங்கள்... எத்தனை பெயர்... எவ்வளவு பெரிய அழைப்பிதழ் ஆனால் இங்குள்ள கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இனிமேல் இப்படி குறைவான கூட்டம் இருக்கக்கூடாது. வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நமது கேப்டனின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் நிச்சயமாக நாம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கூட்டம் முடிந்தவுடன் கலைந்து சென்ற தேமுதிக தொண்டர்கள், கடந்த வாரத்தில் நடக்க இருந்த கூட்டம் தவிர்க்க முடியாத காரணத்தால் ரத்து செஞ்சுட்டாங்க. அன்னைக்கு ஒரு நாள் சம்பளம் போச்சு. வாரத்தின் முதல்நாளில் கூட்டம் வைச்சா... விவசாய கூலி வேலைக்கு போறவங்க என்ன செய்ய முடியும். முதல்நாள் வேலைக்கு போகலைன்னா அடுத்த நாள் வேலைக்கு கூப்பிட மாட்டேன்கிறாங்க. மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடிங்கிறது இதுதான் போல இருக்கு என்று நொந்து கொண்டே பேசி சென்றதை கேட்க முடிந்தது.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
விஜய்யிடம் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற கிருஷ்ணசாமி: குஷியில் காங்கிரஸ், பாமக! காரணம் என்ன?
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Embed widget