மேலும் அறிய

ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்காவிட்டால் விரைவில் போராட்டம் - மின்வாரிய ஊழியர்கள் எச்சரிக்கை

கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அனைத்து சங்க மின்சார ஊழியர்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்த முடிவு

தஞ்சாவூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் 65 வது ஆண்டு   அமைப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க திட்டத் தலைவர் ஏ.முபாரக்பாட்சா தலைமை வகித்தார்.  65வது ஆண்டு அமைப்பு நாள் கொடியினை ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர். தில்லைவனம் ஏற்றி வைத்தார். தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணை தலைவர் பொன்.தங்கவேல் சிறப்புரையாற்றினார். வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் க.அன்பழகன், அரசு போக்குவரத்து தொழிற்சங்க மாநில துணை தலைவர் துரை.மதிவாணன், ஓய்வு பெற்றோர் சங்க பொதுச்செயலாளர் பி.அப்பாதுரை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.மின்சார சம்மேளன நிர்வாகிகள் வி.ஞானசேகரன், கே.நாகராஜன் , பி.சுயம்பு,எம். பாஸ்கர், செல்வநாயகம்,வி. வரதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இறுதியில் நிர்வாகி எம்செல்லகுமார் நன்றி கூறினார்.

ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்காவிட்டால் விரைவில் போராட்டம் - மின்வாரிய ஊழியர்கள் எச்சரிக்கை
இதில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணி புரிகின்ற ஊழியர்கள் அனைவருக்கும்         1.12 2019  முதல் ஊதிய உயர்வு பேசி அமல்படுத்தப்பட்டிற்க  வேண்டும், ஆனால் இதுநாள் வரை ஊதிய உயர்வு பேசப்படாமல் கிடப்பில் உள்ளது. உடனடியாக ஊதிய உயர்வுபேச்சு வார்த்தை பேசிமுடித்து சம்பள உயர்வு ஏற்படுத்த வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு தினக்கூலி ரூபாய் 380 வழங்கிட வேண்டும், அவர்களை படிப்படியாக நிரந்தரம் செய்யப்படவேண்டும், மின் வாரியத்தில் காலியாக உள்ள 55 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பிடத் துரித நடவடிக்கை எடுத்திட வேண்டும்,மின்சார  ஊழியர்களின் வேலை பளுவை குறைக்க வேண்டும், புதிதாக தொடங்கப்பட்ட துணை மின் நிலையங்களுக்கு, போதுமான ஊழியர்களை நியமித்து, புதிய பதவிகளை உடனடியாக அளித்து, அதிகாரிகளை நியமனம் செய்ய வேண்டும், கேங்மேன் பணியாளர்களின் பயிற்சிக் காலத்தை குறைக்க வேண்டும்.

ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை தொடங்காவிட்டால் விரைவில் போராட்டம் - மின்வாரிய ஊழியர்கள் எச்சரிக்கை

அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு பணியிட மாறுதல் செய்திட வேண்டும், பணியின் போது இறப்பவர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்க வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மின்சார பணியாளர்களுக்கு தரமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும், மழை காலங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பாதுகாப்பான கோட் உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். மின்சார ஊழியர்களுக்கு புதிய நவீன முறையில் இயந்திரங்களை போதுமான பயிற்சியளித்து வழங்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேற்கொண்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால் அனைத்து சங்க மின்சார ஊழியர்களை திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget