திருச்சி நகர் பகுதியில் வரும் 29ம் தேதி மின்தடை செய்யறாங்க மக்களே!!!
Trichy Power Cut (29-11-2025): திருச்சியில் வரும் 29ம் தேதி சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது

Trichy Power Shutdown: தஞ்சாவூர்: திருச்சியில் வரும் 29.11.2025 மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. எனவே மக்களே உங்களின் மின் தேவைகளை முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள். குடிநீர் சேகரிப்பு, சமையலுக்கு தேவையானவற்றை அரைத்தல் போன்ற பணிகளை விரைந்து முடித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் 29ம் தேதி திருச்சி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம்.
இந்நிலையில் திருச்சி நகர் பகுதியில் வரும் 29ம் தேதி சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து தென்னூர் மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஏ.முத்துராமன் தெரிவித்துள்ளதாவது:
திருச்சி, நீதிமன்ற வளாகத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் 29.11.2025 (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக அன்று காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை மாநகராட்சிக்குட்பட்ட புது ரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டிதெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்சாண்டிரியா சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ் சாலை.
அண்ணாநகர், குத்பிஷா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கே.எம்.சி. மருத்துவமனை பகுதி, புத்தூர், அருணா தியேட்டர் பகுதி, கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா, மீனா தியேட்டர் பகுதி, கோர்ட் பகுதி, அரசு பொதுமருத்துவமனை பகுதி, பீமநகர், செடல் மாரியம்மன் கோவில் பகுதி, கூனி பஜார், ரொனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈவெரா சாலை, வயலூர் சாலை, பாரதி நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை முன்னரே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுங்கள்.






















