தஞ்சையில் லார்ட்ஜில் இளைஞர் அடித்துக் கொலை- விபச்சார தொழிலில் ஏற்பட்ட பிரச்னையா?
ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் வசந்தாவின் கணவர் செந்தில்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொகுசு காரில் வெளிமாநில இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி, காரிலேயே விபச்சாரத்திற்கு ஈடுபடுத்த முயன்றார்.
தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள என்எஸ்பி ரெசிடென்சியில் உள்ள அறை எண் 204 இல் தங்கி இருந்த நபர் உயிரிழந்தது தொடர்பாக தஞ்சை மருத்துவக்கல்லுாரி காவல் நிலையத்திற்கு, புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் கதவினை திறந்து பார்த்த போது, உயிரிழந்தவர் கோயம்புத்துார் மாவட்டம் மேட்டுப்பாளையம், சின்னம்மா லே அவுட், கென்னட்டு ஜவான் மகன் லெனட் பிராங்கிலின் (39) என்பது தெரிய வந்தது.
பின்னர் அவரது உடலை கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தினர். தொடர்ந்து லெனட் பிராங்கிலின் உடலை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லுாரி போலீசார் சந்தேகம் மரணம் என வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசார் விசாரணையில் தலையில் இரும்பு ராடால் அடித்த பலத்த காயம் இருந்தது. பின்னர் லெனட் பிராங்கிலினை ஆம்புலன்சுக்கு துாக்கும் போது, கண், காது, மூக்கு, வாயிலிருந்து ரத்தம் வெளியில் வந்தது. பின்னர், தலைப்பகுதியில் சோதனையிட்ட போது, ஹெல்மேட் அணிந்திருந்த போது தலையில் அடித்ததால் பின் தலைப்பகுதியில் காயமடைந்து கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், லெனட் பிராங்கிலின் அறையிலுள்ள டைரியில் புதுசு, பழசு என பிரித்து, தங்களுக்கு ஏற்றவாறு கட்டணத்தை குறித்து வைத்துள்ளார்.
இதே போல் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்ட, மாநில பெண்கள் முழு விபரக்குறிப்பும், யார் யார் வந்து சென்றார்கள். அவர்கள் கொடுத்த தொகை எவ்வளவு, எப்போது ஊருக்கு அனுப்ப வேண்டும் போன்ற அனைத்து தகவல்களும் குறித்து வைத்துள்ள டைரி சிக்கியுள்ளது. மேலும், அந்த லாட்ஜில், குஜராத், கேரளா போன்ற வெளி மாநிலத்தை சேர்ந்த பெண்கள் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது. லெனட்பிராங்கிலின், கடந்த 22 ஆம் தேதி முதல் தங்கியிருந்துள்ளார். அப்போது, அவருக்கு ஒய்வு பெற்ற காவல் துறை இன்ஸ்பெக்டர் வசந்தா என்பவரது கணவர் செந்தில்குமாரின், மொபட்டை வைத்து கொண்டு வெளியில் சென்று வருவதற்கு பயன்படுத்தியுள்ளார். அந்த மொபட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
லெனட்பிராங்கிலின், உள்ளாடை அணியாமல் பேன்ட் மட்டும் அணிந்து அவசர அவசரமாக புறப்பட்டுள்ளார். லெனட்பிராங்கிலின் புறப்படுவது தெரிந்த கொண்ட கொலையாளிகள் 4 பேர், ஹெல்மேட் அணிய வைத்து, தலையில் இரும்பு ராடால் அடித்து கொலை செய்திருக்கலாம் என தெரிய வருகிறது. இது குறித்து ரெசிடென்ஸி அலுவலர், ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் வசந்தாவின் கணவர் செந்தில்குமார் ஆகியோரை விசாரிக்க உள்ளனர். மேலும் கொலை செய்ய வந்த 4 பேர் யார் என்பது பற்றி, அங்குள்ள சிசிடிவி கேமரா கண்காணிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். ஒய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் வசந்தாவின் கணவர் செந்தில்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொகுசு காரில் வெளிமாநில இளம்பெண்ணை ஆசை வார்த்தை கூறி, காரிலேயே விபச்சாரத்திற்கு ஈடுபடுத்த முயன்றார். ஆனால் அந்த இளம் பெண், கூச்சலிட்டதால், வல்லம் பைபாஸ் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த காரிலிருந்து வெளியில் தள்ளி விட்டார். இது குறித்து அந்த இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில், தஞ்சையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.