மேலும் அறிய

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை ரயில் நிலைய மேம்படுத்தும் பணிக்கு காணொலி  மூலம் பிரதமர் நரேந்திர மோடி  அடிக்கல் நாட்டியுள்ளார்.

இந்திய ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு சமீபகாலமாக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்திய ரயில்வே துறையில் மிகவும் அதிவேக ரயிலாகவும், மிகவும் சொகுசான ரயிலாகவும் வந்தே பாரத் ரயில் இயங்கி வருகிறது. அதேபோல, ரயில்வே பணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒன்று 'அம்ரித் பாரத்’ திட்டம்.  இந்த திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளது. இந்த 508 ரயில்நிலையங்கள்  புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவு பெற உள்ளது. 

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

பிரதமர் நிகழ்ச்சி:

இதற்காக பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 6) அடிக்கல் நாட்டி துவக்கிவைத்துள்ளார். டெல்லியில் இருந்தப்படியே காணொலி மூலம் ரயில் நிலையங்களை  மேம்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். 25,000 கோடி ரூபாய் செலவில் 508 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளது.  இந்த 508 ரயில் நிலையங்கள் இன்று பணிகள் தொடங்கப்பட்டு, 2025-ஆம் ஆண்டுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இந்த பணியின்போது, ரயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள், பயணிகள் காத்திருக்கும் அறைகள், கூடுதல் நடைமேடைகள், லிப்ட் வசதி, வாகன நிறுத்த வசதி, கேமரா பொருத்துதல், நுழைவு வாயில் சீரமைப்பு போன்ற பணிகள் நடைபெற உள்ளது.

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

இந்த 'அம்ரித் பாரத்' திட்டம் மூலம் உத்தர பிரதேசத்தில் 55, பீகாரில் 49, மகாராஷ்டிராவில் 44, மேற்கு வங்கத்தில் 37, மத்திய பிரதேசத்தில் 34, அசாமில் 32, ஒடிசாவில் 25, பஞ்சாபில் 22, குஜராத், தெலங்கானாவில் தலா 21, ஜார்க்கண்டில் 20, ஆந்திராவில் 18, ஹரியானாவில் 15, கர்நாடகாவில் 13  ஆகியவை புனரமைக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட உள்ளன. அதன்படி, செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், நாகர்கோவில், ஜோலார்பேட்டை ஆகிய 18 ரயில் நிலையங்கள் 381 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளன.

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

இந்நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரயில் நிலையங்களை மறு வடிவமைப்பு செய்யும் பணிக்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தொடக்க விழாவில் நடைபெற்றது. இத்திட்டத்தின்கீழ் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மயிலாடுதுறை ரயில் நிலையம் மறு வடிவமைப்பு செய்யப்பட உள்ளது. இதற்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற விழாவில் மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர் ராஜகுமார், பாஜக நிர்வாகிகள் மற்றும் ரயில்வே நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் - மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

சலசலப்பு:

இந்த சூழலில் இவ்விழாவில் பேசுவதற்கு பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரத்தை பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி இதைக் கண்டித்து விழா மேடையின் முன்பு பாஜக நிர்வாகிகள் 30-க்கும் மேற்பட்டோர் திரண்டு பாஜக மாவட்ட தலைவரை பேச அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி கூச்சலிட்டனர். இதனால் விழா மேடையில் சலசலப்பு ஏற்பட்டு பதற்றம் நிலவியது.

இதைத்தொடர்ந்து அவர்களை சமாதானம் செய்து வைத்த ரயில்வே அதிகாரிகள், பாஜக மாவட்ட தலைவர் பேசுவார் என அறிவித்தனர். இதனால் பாஜக நிர்வாகிகள், பாரத் மாதா கி ஜே என வெற்றி முழக்கங்களை எழுப்பியவாறு தங்கள் இருக்கையில் அமர்ந்தனர். இதை தொடர்ந்து பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மேடையில் சிறிது நேரம் பேசினார்.

மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

Thanjavur power cut: தஞ்சை மக்களே நாளை 23.6.2026 கவனமுங்க... என்ன விஷயம் தெரியுங்களா?
Thanjavur power cut: தஞ்சை மக்களே நாளை 23.6.2026 கவனமுங்க... என்ன விஷயம் தெரியுங்களா?
Thanjavur power cut: திருநாகேஸ்வரம் மக்களே நாளை 23.6.2026 உங்களுக்கு வியர்க்கப் போகிறது... எதனால தெரியுங்களா?
Thanjavur power cut: திருநாகேஸ்வரம் மக்களே நாளை 23.6.2026 உங்களுக்கு வியர்க்கப் போகிறது... எதனால தெரியுங்களா?
சொக்கலை மக்களின் கனவு நனவாகும் நாள்: கல்லணைக்கால்வாயில் புதிய நடைபாலப் பணிகள் வெகு மும்முரம்!
சொக்கலை மக்களின் கனவு நனவாகும் நாள்: கல்லணைக்கால்வாயில் புதிய நடைபாலப் பணிகள் வெகு மும்முரம்!
ஆடிப் பிரிவின் ரகசியம்: ஆன்மீகம், அறிவியல், வாழ்வியல் சொல்லும் அதிசயம்!
ஆடிப் பிரிவின் ரகசியம்: ஆன்மீகம், அறிவியல், வாழ்வியல் சொல்லும் அதிசயம்!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
திமுக ஆட்சியிலும் நனையுது.. தவெக ஆட்சியிலும் நனையுது! நெல்மூட்டைகளை பாதுகாக்க இபிஎஸ் கோரிக்கை
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
அமெரிக்காவை ஓரங்கட்டும் இந்தியா! ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் மீண்டும் அதிகரிப்பு!
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
கம்பீரம், கவர்ச்சி... பார்த்தாலே ஓட்டத் தோன்றும் Keeway SR125! பைக்கின் விலை என்ன?
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ரூ 3.3. லட்சம் கோடி முதலீடுகள், 2.3 லட்சம் வேலைவாய்ப்பை கோட்டை விட்ட திமுக! ஃபயர் மோடில் அமைச்சர் கீர்த்தனா
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
DMK: அடம்பிடிக்கும் துரைமுருகன்.. அப்செட்டில் மு.க.ஸ்டாலின்! திமுக-வில் நடப்பது என்ன?
iPhone 17 Discount: மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
மக்களே.! ரூ.34,000 கம்மியா ஐபோன் 17 வாங்கணுமா.? வாங்க, எங்க, எப்படி வாங்குறதுன்னு சொல்றோம்
Redmi Turbo 5 Review: எவ்ளோ அடிச்சாலும் அசராத பேட்டரி.! ரெட்மி டர்போ 5 எப்படி இருக்கு.? வாங்கலாமா.? இதோ ரிவ்யூவ்
எவ்ளோ அடிச்சாலும் அசராத பேட்டரி.! ரெட்மி டர்போ 5 எப்படி இருக்கு.? வாங்கலாமா.? இதோ ரிவ்யூவ்
Embed widget