மேலும் அறிய

தஞ்சையில் பியூஷ் கோயல் திறந்து வைத்த உணவு அருங்காட்சியகம் - கோபத்துடன் வெளியேறிய திமுக எம்.பி

’’தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு எம்பிக்கள் உள்ளோம். ஏன் எங்களையும், மாவட்ட கலெக்டரையும் விழாவிற்கு அழைக்கவில்லை. வடமாநிலத்தவர்கள் இருந்தால் போதுமா என்று கோபத்துடன் கேட்டார்’’

இந்தியாவிலேயே முதன்முறையாக, இந்திய உணவுக் கழகம் சார்பில் உணவு அருங்காட்சியகம்  1.1 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு,  பார்வையாளர்களுக்காக மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் காணொலி மூலம் திறந்து வைத்தார். இந்திய உணவு கழகம் முதன்முறையாக தஞ்சாவூரில் கடந்த 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அதன்பிறகு நாடு முழுவதும் அலுவலகங்கள் திறக்கப்பட்டது. தஞ்சாவூரில் நிர்மலா நகரில் உள்ள மண்டல அலுவலகத்தில் உணவு அருங்காட்சியகம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

தஞ்சையில் பியூஷ் கோயல் திறந்து வைத்த உணவு அருங்காட்சியகம் - கோபத்துடன் வெளியேறிய திமுக எம்.பி

அதன்படி சுமார் 2,500 சதுரஅடி பரப்பளவில் உணவு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இதில் பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின் உதவியோடு, சுமார் 13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதன் உணவுக்காக எப்படி வேட்டையாட துவங்கினான் என்பதில் தொடங்கி,  உழவு கருவிகள், விவசாயம், உலகில் உள்ள தானிய களஞ்சியங்கள், விதைகள் சேகரிப்பு, உலகளவில் உணவு உற்பத்தியின் சவால்கள், பருப்பு வகைகள், காய்கறி பழங்கள், இந்தியாவில் உள்ள உணவு முறைகள், பொதுவிநியோகத்திட்டம், விவசாயத்தில் உழவு செய்வது முதல் நாற்றங்கால், நடவு, களை எடுப்பு, அறுவடை, கொள்முதல், அரவை, மக்களுக்கு அரிசியாக விநியோகம் செய்யும் இந்திய உணவு கழகத்தின் அத்தனை பணிகளையும் மெழுகு பொம்மைகளாக  தத்ரூபமாக காட்சி படுத்தியுள்ளனர். இந்த அருங்காட்சியகத்தை, பொதுமக்கள் பார்வைக்காக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஸ்கோயல் மும்பையில் இருந்தவாறு காணொளி மூலம் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், இந்தியாவின் 75 ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக, இந்தியாவிலே தஞ்சாவூரில் உணவு அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடுகளை செய்த இந்திய உணவு கழகத்தினரை இந்த நேரத்தில் பாராட்டுகிறேன். இறக்குமதியாளர் முதல் ஏற்றுமதியாளர் வரை உணவுப் பாதுகாப்பின் மூலம் தேசத்தில் விவசாயப் புரட்சியை இந்திய உணவு கழகம் வெளிப்படுத்தி வருகிறது. சமூகத்தில் ஏழைகள் மற்றும் சலுகைகள் கிடைக்காத பிற பிரிவினருக்கு இந்திய உணவு கழகம் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்றார்.

தஞ்சையில் பியூஷ் கோயல் திறந்து வைத்த உணவு அருங்காட்சியகம் - கோபத்துடன் வெளியேறிய திமுக எம்.பி

தஞ்சாவூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியி்ல் தென்மண்டல செயல் இயக்குநர் டல்ஜித்சிங், முதன்மை பொது மேலாளர் சஞ்சீவ்குமார் கவுதம், தமிழக பொது மேலாளர் பி.என்.சிங், தஞ்சாவூர் மண்டல  மேலாளர் தேவேந்திர சிங் மார்டோலியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த அருங்காட்சியகம் அலுவலக வேலை நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். இந்த அருங்காட்சியகத்தில் ப்ரொஜெக்சன் மேப்பிங், டச் ஸ்கீரின் கியோஸ்க், ப்ராக்ஸிமிட்டி சென்சார்கள் போன்ற நவீன தொழில் நுட்பங்களை கொண்டுள்ளது. மேலும், இந்திய உணவு கழகத்தில் செயல்பாடுகள் குறித்தும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில்,  பீயூஸ்கோயல் திறந்து வைத்து பேசிக்கொண்டிருந்த போது, தஞ்சாவூர் எம்பியும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பழனி மாணிக்கம், மேடைக்கு வந்து அமர்ந்தார். அப்போது அங்கு வந்த அதிகாரிகளிடம், தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டு எம்பிக்கள் உள்ளோம். ஏன் எங்களையும், மாவட்ட கலெக்டரையும் விழாவிற்கு அழைக்கவில்லை. வடமாநிலத்தவர்கள் இருந்தால் போதுமா என்று கோபத்துடன் கேட்டார். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், கொரோனோ தொற்று விதிமுறைகள் இருப்பதால், அதிகாரிகளுக்கு மட்டும் அழைப்பு கொடுத்துள்ளோம், வேறு யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என்றனர். இதனால் ஆத்திரமடைந்த எம்பி பழனிமாணிக்கம், வேகமாக வெளியில் வந்தார். இதனையறிந்த அதிகாரிகள், கண்காட்சியகத்தை பார்வையிட வேண்டும் என பல முறை கெஞ்சியும், கண்காட்சியகத்தை பார்வையிடாமல் வெளியேறினார். இதனால் விழா அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் காண

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ABP Premium

வீடியோ

Dhanush Aishwarya Divorce : ’’பசங்க என்கூட தான்’’ தனுஷ் ஐஸ்வர்யா மோதல்? முடிவுக்கு வந்த பஞ்சாயத்துFather Crying : ’’FOOTBOARD அடிக்காதீங்க பா'’காலில் விழுந்து கதறிய தந்தை தேம்பி அழுத மாணவர்கள்BJP Councillor : ’’உதயநிதி பிறந்தநாளுக்கா?’’ SWEET கொடுத்த பாஜக கவுன்சிலர்!திமுக கவுன்சிலர் THUGLIFEKarur Drunken Girl | ”மூடிட்டு போங்க டி...” போலீஸை மிரட்டிய பெண் மதுபோதையில் ATROCITY! | MK Stalin

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone: வந்துட்டேன்னு சொல்லு.! உருவானது ஃபெங்கல் புயல் .! இனிதான் ஆட்டமே ஆரம்பம்.!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
Fengal Cyclone LIVE: வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்! நாளை கரையை கடக்கும்!
"ஊழல் தலைவிரித்தாடுகிறது" துணை முதல்வர் திடீர் குற்றச்சாட்டு! முதலமைச்சருடன் மல்லுகட்டா?
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
ஆவேஷம் மாதிரி ஒரு கத சொன்னேன்... மெசேஜ் இல்லையானு கேட்டாங்க...அஜித் படம் பற்றி மனம் திறந்த விக்னேஷ் சிவன்
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
YouTuber Irfan : ”யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எடுக்காமல் தடுப்பது யார்?” Friend-தான் காரணமா..?
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: மோடிக்கு பறந்த கடிதம்! கறார் காட்டும் முதல்வர் ஸ்டாலின்
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Watch Video : ஜெட் வேகத்தில் வந்த பந்து.. ஸ்பைடர் மேனாக மாறிய கிளென் பிலிப்ஸ்!
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Free Laptop: மாணவர்களுக்கு இலவச லேப்டாப்; ஏஐசிடிஇ அறிவிப்பு- உண்மை என்ன?
Embed widget