மேலும் அறிய

பார்க்கிங் ஒழுங்கின்மை: பெரம்பலூர் போக்குவரத்திற்கு பெரும் தலைவலி!

பெரம்பலூா் சாலையின் இருபுறமும், இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களால் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

தஞ்சாவூர்: சாலையோரம் நிறுத்தப்படும் பைக், கார் மற்றும் பிற வாகனங்களால் பெரம்பலூா் நகா் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்று பொதுமக்கள் வலியறுத்தி உள்ளனர்.

கிராமப் பகுதிகளைச் சோ்ந்த மக்கள் கூடும் இடமாகவும், தனியாா் மற்றும் அரசுக் கல்லூரிகள் உள்ள இடமாகவும், வங்கிகள், வணிக வளாகங்கள், சுற்றியுள்ள கிராமப்புறங்களை சென்னைக்கு இணைக்கும் பேருந்து நிலையம், நாள்தோறும் பல ஆயிரம் பொதுமக்கள் கூடும் பகுதியாக பெரம்பலூா் நகரம் திகழ்ந்து வருகிறது. இங்குள்ள சாலையின் இருபுறமும், இருசக்கர வாகனங்கள் மற்றும் பிற வாகனங்களால் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனால் தினம், தினம், போக்குவரத்து நெரிசலில் சிக்கி இப்பகுதி மக்கள் படும் பாடு சொல்லி மாள முடியாத ஒன்றாகும். பெரம்பலூா் நகரின் ஒருபுறம் சாலையோரம் பெருகி வரும் சிறு வியாபாரிகளின் கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில், மறுபுறம் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்துக்கு மேலும் இடையூறு விளைகிறது. நகரின் பிரதானப் பகுதியில் வாகன ஓட்டுனர் தங்களின் இஷ்டத்திற்கு வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். அதிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.

குறிப்பாக கடைவீதி, தலைமை அஞ்சலகத் தெரு, பழைய பேருந்து நிலையம், வடக்கு மாதவிச் சாலை, எளம்பலூா் சாலை, மார்க்கெட் தெரு, சங்குப்பேட்டை, புகா் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பத்திரப் பதிவு அலுவலகம், வங்கிகள், துணி, நகைக் கடைகள் அதிகமாக இருப்பதால், இங்கு வரும் பொதுமக்கள் அவா்கள் வாகனங்களை சாலையோரம் நிறுத்தி விடுகின்றனா். அதோடு மட்டுமல்லாமல் அங்குள்ள கடைக்காரரா்களும், அவா்களது கடைக்குரிய பொருள்களை சாலையோரம் வைத்துவிடுவதால் சாலையின் பரப்பளவு குறுகிவிடுகிறது. இதனால், போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து நெரிசலையும், தொடா் விபத்துகளையும் தடுப்பதற்காக பேருந்து நிலையம், பாலக்கரை, விளாமுத்தூா் சாலை, சங்குப்பேட்டை, கனரா வங்கி சாலை, காமராஜா் வளைவு ஆகிய இடங்களில் பல லட்சம் மதிப்பில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டன. இதில், காமராஜா் வளைவு, விளாமுத்தூா் பிரிவுச்சாலை பகுதியில் அமைக்கப்பட்ட சிக்னல் மட்டுமே செயல்படுகிறது. இதர பகுதிகளில் உள்ள சிக்னல்களை முறையாக பராமரிக்காததால், அவை அனைத்தும் பழுதடைந்து வெறும் காட்சிப் பொருளாக உள்ளது.

போக்குவரத்து காவலா்களும் இல்லாததால் அடிக்கடி சாலை விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது. தானியங்கி சிக்னல்களை சீரமைத்து காலை முதல் இரவு 8 மணி வரை செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். நகரின் பிரதானச் சாலைகளில் ஒன்றிரண்டு போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டிருந்தாலும், அவா்கள் போக்குவரத்து நெரிசலை முறைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை என்றும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டுகின்றனர். 

பெரம்பலூா் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்களால், போக்குவரத்து நெரிசலும் அதிகளவில் காணப்படுகிறது. இவற்றைக் கட்டப்படுத்த போக்குவரத்து போலீஸாா் சொற்ப அளவில் உள்ளனா். ஊா்க்காவல் படையைச் சோ்ந்தவா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும், அவா்களை வாகன ஓட்டுநா்கள் பொருட்படுத்துவதில்லை.

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பெரம்பலூா் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதுடன், சாலையை ஆக்கிரமித்தவாறு தேவையற்று நிறுத்தப்படும் வாகன ஓட்டுநா்களை எச்சரித்து அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிக்னல்களை சரி செய்து போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் விருப்பமாகும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
மண்டையோட்டின் அடிப்பகுதியில் இருந்த அரிதான கட்டி... தஞ்சை மீனாட்சி மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?
காவல் துறையில் களையெடுப்பு... இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 போலீசார் சஸ்பெண்ட்: பின்னணி என்ன?
தஞ்சையில் அதிரடி வேட்டை! ஒரே நாளில் 1 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
தஞ்சையில் அதிரடி வேட்டை! ஒரே நாளில் 1 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
அரசாணை வந்தே 2 மாதமாச்சு... இன்னும் வழங்கப்படாத குறுவை தொகுப்பு நிதி: விவசாயிகள் வேதனை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
MK Stalin: திமுகவில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு.. மூத்தவர்கள் வழிவிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
AUS vs BAN: வங்கதேசத்தை சுருட்டி வீசிய ஸ்டார்க்.. பதில் தாக்குதல் நடத்தும் நாகின் பாய்ஸ்! அனல்பறக்கும் 2வது டெஸ்ட்
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழ்நாட்டில் 2 பேருக்கு அறிவிப்பு- யாருக்கு? என்ன காரணம்?
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
ஆதவ் மட்டும் தான் பதில் சொல்வாரா.. மற்ற அமைச்சர்கள் எதற்கு?... கொந்தளித்த பிரேமலதா!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
70 கி.மீ. மைலேஜ்; ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை ₹10,000 முன்பணம், ₹85 தினசரி EMI-ல் சொந்தமாக்குங்கள்!
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
TN Assembly: முன்கூட்டியே தகவல் சொன்ன கருப்பு ஆடு.. சபாநாயகரிடம் தொக்காக மாட்டிய சேகர்பாபு.. விளாசிய ரமேஷ்
Embed widget