மேலும் அறிய

உடைப்பு ஏற்பட்ட ஓஎன்ஜிசி குழாய்: கருகிய விவசாய நிலம்... 5 ஆண்டுக்கு ஆபத்து என குமுறல்!

இதன் காரணமாக அடுத்த 5 வருடங்களுக்கு முழுவதுமாக விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

உக்கடை கமலாபுரம் பகுதியில் விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாய் உடைப்பு ஏற்பட்டு விபத்து. ஒரு ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை.

திருவாரூர் நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஓஎன்ஜிசி நிறுவனம் விவசாய நிலங்களில் குழாய் பதித்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஆண்டு விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கச்சா எண்ணெய் பரவி, விவசாய நிலம் பாதிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் இருந்து ஓஎன்ஜிசி நிர்வாகம் குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உடைப்பு ஏற்பட்ட ஓஎன்ஜிசி குழாய்: கருகிய விவசாய நிலம்... 5 ஆண்டுக்கு ஆபத்து என குமுறல்!

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கருப்புகிளார் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்கிற விவசாயிக்கு, உக்கடை கமலாபுரம் கிராமத்தில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்திற்கு அடியில் 3 ஓஎன்ஜிசி குழாய்கள் செல்கின்றன. இந்த குழாய்கள் கோமாலபேட்டை பகுதியில் இருந்து நல்லூர் பகுதி வரை செல்கின்றன. இந்த நிலையில் இன்று காலை சுப்பிரமணி விவசாயிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செல்லக்கூடிய ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அந்தப் பகுதியில் கச்சா எண்ணெய் முழுவதுமாக விளைநிலத்தில் பரவிவருகிறது.

உடைப்பு ஏற்பட்ட ஓஎன்ஜிசி குழாய்: கருகிய விவசாய நிலம்... 5 ஆண்டுக்கு ஆபத்து என குமுறல்!

இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதனை அடுத்து அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறையினர் கச்சா எண்ணெய் கொப்பளித்து வரும் இடத்திற்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் தொடர்ந்து வெளியேறி வருவதால் அருகில் உள்ள அருள் ராஜா என்கிற விவசாயி நிலத்திலும் கச்சா எண்ணெய் பரவி வருகிறது.  இதன் காரணமாக அடுத்த 5 வருடங்களுக்கு முழுவதுமாக விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில் கச்சா எண்ணெய் பரவி வரும் விவசாய நிலத்திற்கு ஓஎன்ஜிசி அதிகாரிகள் தற்போது நேரடியாக வந்து ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் கச்சா எண்ணெய் வெளியேறிய இடம் முழுவதும் தோண்டப்பட்டு புதிய மணல் நிரப்பி தருவதாகவும் மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஓஎன்ஜிசி அதிகாரிகள் உத்தரவாதம் அளித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
வீடுகள் கட்டுவதை எதிர்க்கவில்லை... சரியான இடத்தில் கட்டுங்கள்! கல்யாணசுந்தரம் எம்.பி. கடும் அதிருப்தி
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
மாம்பழத்துக்கு விலை இல்லை... மரங்களை வெட்டும் அவலம்: கும்பகோணத்தில் மாங்காய் உடைத்து நூதனப் போராட்டம்
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!
பாதிக்கு பாதி... மதியம் டப்... மாலையில காற்றுல ஜில்: இன்னைக்கு மழை பெய்யுமா தஞ்சாவூருல!!!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget