மேலும் அறிய
Advertisement
பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்...! தரக்குறைவாக நடத்தப்படும் பெண்கள்..! என்னதான் தீர்வு..?
பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் மகளிர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தஞ்சாவூர்: மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம் என்று எப்போது அறிவிக்கப்பட்டதோ அன்றிலிருந்து இன்று வரை பெண்கள் பயணம் செய்யும் போது நடத்துனர்களால் தொடர்ந்து அவமானப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றனர். குறிப்பாக வயதானவர்களை நடத்துனர்கள் நடத்தும் முறை பெரும் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது.
அந்த வகையில் காசு ஓசி என்றால் பஸ்சில் போயிட்டு, போயிட்டு வருவியா? என மூதாட்டியை தரக்குறைவாக நடத்துனர் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி மற்றும அதிர்வலைகளை ஏற்படுத்த உடனடி நடவடிக்கையாக அந்த நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பெண்களை மரியாதையின்றி நடத்தும் நடத்துனர்கள்:
தஞ்சாவூரில் இருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பஸ் இயங்கி வருகிறது. இந்த பஸ்சில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்றுள்ளார். பின்ன மீண்டும் அதே பஸ்சில் ஊருக்கு திரும்புவதற்காக ஏறியுள்ளார். இதனால் பஸ் நடத்துனர் என்ன வந்ததோ தெரியவில்லை. அந்த மூதாட்டியை மரியாதை இன்றி நடத்தியுள்ளார்.
மூதாட்டியிடம் காசு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என கேட்கிறார். இதற்கு அந்த மூதாட்டி காசு ஓசி என்று நான் போகவில்லை. ஏன் தம்பி கோபமாக இப்படி பேசுகிறாய். நான் மாலை போட்டு உள்ளேன் கோபமா பேசுகிறாய் என பரிதாபமாக கேட்கிறார். இந்த காட்சிகளை அங்கு இருந்த சகப் பயணி தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.
மன உளைச்சல்:
அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதேபோல் பெண்கள் அரசு பஸ்சில் இலவசமாக பயணம் செய்வதால் நடத்துனர்களுக்கு என்ன பிரச்னை என்று தெரியவில்லை. அவர்களை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகின்றனர். பாதி வழியில் இறக்கி விட்ட சம்பவம், மோசமான வார்த்தைகளால் பேசுவது என்று தொடர் கதையாகி வருகிறது. மேலும் மூதாட்டிகள் பஸ்களில் ஏறினால் சாகற வயசுல ஓசி பயணமா என்று நக்கல் செய்வது. இறங்குவதற்குள் இறந்துவிட்டால் யார் பதில் சொல்வது. வீட்டிற்குள்ளேயே இருந்து தொலைக்காமல் பஸ்சில் வந்து எங்கள் உயிரை எடுக்கிறாய் என்று ஏகவசனத்தில் பேசுவது போன்ற செயல்களில் சில நடத்துனர்கள் ஈடுபடுகின்றனர். இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படுகிறது.
அந்த வகையில் தற்போது மூதாட்டியிடம் நடத்துனர் நடந்து கொண்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று பெண்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. தொடர்ந்து மூதாட்டியிடம் மரியாதைக்குறைவாக பேசிய நடத்துனரை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2024
தேர்தல் 2024
சேலம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion