மேலும் அறிய

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக அதிகரிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

’’17 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதால்,  விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல்  அவதிப்பட்டு வருகின்றனர்’’

காவிரி டெல்டா மாவட்டங்களில், சுமார் 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெல் அறுவடைப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து  வருவதால் அறுவடை செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் அதிகமாக காணப்படுகிறது. மத்திய அரசின் விதிப்படி நேரடி கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் ஈரப்பதமுள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்பதால்,  விவசாயிகள் நெல்லை விற்க முடியாமல்  அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் ஏராளமான விவசாயிகள் நெல் மணிகளை, கொள்முதல் நிலையங்கள் முன்பும், நெடுஞ்சாலைகளிலும் நெல்லை கொட்டி காய வைத்து பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். என்றாலும் தொடர்ந்து மழை பெய்வதால் நெல் காய்வதில்லை. ஈரப்பதத்தில் 22 சதவீதம் வரை தளர்வு அளிக்க வேண்டுமென  விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.


கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக அதிகரிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி கோரிக்கை விடுத்திருந்தது. அதன்பேரில் இந்திய உணவு கழகத்தின் தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு தென் மண்டலத் துணை இயக்குநர் எம்.இசட்.கான் தலைமையில் தொழில்நுட்ப அலுவலர்கள் பி.பிரபாகரன், சி.யூனுஸ் உள்ளிட்ட மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். திருவையாறு அருகே அரசூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் நெல் குவியலிலிருந்து மாதிரிகள் சேகரித்தனர்.

பின்னர், நெல் மணிகளை பார்வையிட்டு சோதனை செய்தனர். தொடர்ந்த நெல் மூட்டைகளை கொண்டு வந்த விவசாயிடம் நடவு, அறுவடை செய்தது எப்போது, அறுவடைக்கு முன்பு மழை பெய்ததா அல்லது அதன் பிறகு மழை பெய்ததா என விசாரித்தனர். விவசாயிகள் எடுத்த வந்த நெல் மணிகளை ஈரப்பதத்தை இயந்திரம் மூலம் சோதனையிட்டனர். இதில் முதலில் வந்த நெல் மணிகளில் 18.3 சதவீதமும், இரண்டாவதாக வந்த நெல் மணிகளில் 21 சதவீதமும் ஈரப்பதம் இருந்தது. அதனை படிவத்தில் பூர்த்தி செய்து, அனைத்து அலுவலர்கள், விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று சென்றனர். மேலும் நெல்லை சிறிதளவு ஆய்வுக்காக  எடுத்துச் சென்றனர்.


கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதத்தை 22% ஆக அதிகரிப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு

பின்னர் செய்தியாளர்களிடம் துணை இயக்குநர் கான் கூறுகையில், தற்போது நெல்லில் ஈரப்பதம் தொடர்பாக மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் மத்திய அரசிடம் அளிக்க உள்ளோம். அதன் பிறகு மத்திய அரசு முடிவு செய்யும் என்றார். இவர்களுடன்  தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக இணை மேலாண் இயக்குநர் சங்கீதா, தஞ்சாவூர் முதுநிலை மண்டல மேலாளர் என்.உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதை தொடர்ந்து மடிகை, தென்னமநாடு, ஒரத்தநாடு புதூர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.

தலைப்பு செய்திகள்

தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
அகண்ட காவிரி வறண்டது... கொண்டாட்டம் இல்லாமல் களையிழந்தது ஆடிப்பெருக்கு
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
பாரம்பரிய விருந்தும் நவீன அறிவியலும்: வாழை இலையில் உணவருந்துவதன் மருத்துவ ரகசியங்கள்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!
8 ஆண்டு காலக் காத்திருப்புக்கு விடிவுகாலம்: சென்னை - தஞ்சாவூர் பயணம் இனி செம்ம ஸ்பீட்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Embed widget