மேலும் அறிய

எச்சரிக்கை பலகையும் இல்லை... ரிப்ளெக்டரும் இல்லை: வேகத்தடை இருப்பதும் தெரியவில்லை

வேகத்தடை இருப்பதை முன்கூட்டியே உணர்த்தும் எச்சரிக்கை பலகை, ஒளிரும் ரிப்ளெக்டர்கள், கேட்-ஐஸ் (Cat Eyes) அல்லது பிரதிபலிக்கும் சாலை அடையாளங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே 8-ம் நம்பர் கரம்பை பைபாஸைத் தாண்டி ராமநாதபுரம் ஊராட்சிக்குச் செல்லும் முக்கியச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைக்கு, முன்எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் ஒளிரும் ரிப்ளெக்டர்கள் (Reflectors) பொருத்தப்படாததால், இரவு நேரங்களில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படும் அபாயகரமான சூழல் நிலவி வருகிறது.

பெரிய உயிர்ச்சேதம் ஏற்படும் முன்பே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

முக்கிய போக்குவரத்து வழித்தடம்

8-ம் நம்பர் கரம்பையிலிருந்து ராமநாதபுரம் வழியாக தஞ்சாவூரை இணைக்கும் இந்தச் சாலை, அப்பகுதியின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாகும். இந்தச் சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் தஞ்சாவூரிலிருந்து ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களும் இந்தச் சாலையையே அதிகளவில் பயன்படுத்துகின்றன. இரவு 10 மணிக்குப் பிறகும் இந்தச் சாலையில் போக்குவரத்து குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வேகத்தடை அமைத்தது நல்லது... ஆனால் பாதுகாப்பு வசதிகள் இல்லை

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேகத்தடை அமைக்கப்பட்டிருப்பது பாராட்டத்தக்க நடவடிக்கையாக இருந்தாலும், அதற்கான அடிப்படை பாதுகாப்பு அம்சங்களே இல்லாதது வாகன ஓட்டிகளை கடும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

வேகத்தடை இருப்பதை முன்கூட்டியே உணர்த்தும் எச்சரிக்கை பலகை, ஒளிரும் ரிப்ளெக்டர்கள், கேட்-ஐஸ் (Cat Eyes) அல்லது பிரதிபலிக்கும் சாலை அடையாளங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. வேகத்தடையில் வெள்ளை நிற பெயிண்ட் மட்டும் பூசப்பட்டுள்ள நிலையில், அது இரவு நேரத்தில் முற்றிலும் தெளிவாகத் தெரிவதில்லை.

இருள் சூழ்ந்த சாலை... தெரியாத வேகத்தடை

இந்தச் சாலையில் போதிய தெருவிளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் பெரும்பாலான பகுதி இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. இதனால் வேகத்தடை மிக அருகில் வந்த பிறகே வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு வருகிறது. குறிப்பாக, இந்தச் சாலையை முதல் முறையாக பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் அல்லது வெளியூரில் இருந்து வருபவர்கள் வேகத்தடை இருப்பதை அறியாமல் அதிக வேகத்தில் வரும்போது, திடீரென வேகத்தடையில் ஏறி இறங்கும் நிலை உருவாகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகம் பாதிப்பு

போதிய வெளிச்சமின்மை மற்றும் எச்சரிக்கை பலகை இல்லாததால், இருசக்கர வாகனங்களில் செல்வோர் திடீரென வேகத்தடையில் ஏறும்போது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கி விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பலர் கை, கால் மற்றும் தலையில் காயமடைந்த சம்பவங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மழைக்காலங்களில் இந்த ஆபத்து மேலும் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.

பின்புற வாகனங்களுக்கும் விபத்து அபாயம்

வேகத்தடையை கடைசி நேரத்தில் கவனிக்கும் கார் மற்றும் வேன் ஓட்டிகள் திடீரென பிரேக் பிடிப்பதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதும் அபாயமும் அதிகரித்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளால் (High Beam) வேகத்தடை தெளிவாகத் தெரியாத சூழலில், முன்னால் செல்லும் வாகனம் திடீரென வேகத்தை குறைப்பதால் சங்கிலித் தொடர் விபத்துகள் ஏற்படும் அபாயம் எந்நேரமும் நிலவி வருகிறது.

உடனடியாக செய்ய வேண்டிய பணிகள்

சாலைப் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுவதாவது: வேகத்தடைக்கு குறைந்தபட்சம் 100 முதல் 200 மீட்டர் தூரத்திற்கு முன்பே எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். வேகத்தடையின் மீது தரமான பிரதிபலிப்பு பெயிண்ட் பூச வேண்டும். இரவு நேரத்தில் தெளிவாகத் தெரியும் ரிப்ளெக்டர்கள் மற்றும் கேட்-ஐஸ் பொருத்த வேண்டும். போதிய தெருவிளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். வேகத்தடை விதிமுறைகளுக்கு ஏற்ப உயரம் மற்றும் அகலத்தை பராமரிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே விபத்துகளை கணிசமாக குறைக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களின் கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், "வேகத்தடை அமைத்திருப்பது சாலை பாதுகாப்புக்காகத்தான். ஆனால் அதை முன்கூட்டியே தெரியப்படுத்தும் எச்சரிக்கை வசதிகள் இல்லாததால் அதுவே விபத்துக்கு காரணமாக மாறியுள்ளது. பெரிய உயிரிழப்பு சம்பவம் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, அதற்கு முன்பே அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட வேண்டும். வேகத்தடையில் உடனடியாக ரிப்ளெக்டர்கள் பொருத்தி, இருபுறங்களிலும் எச்சரிக்கை பலகைகளை அமைக்க வேண்டும். தெருவிளக்கு வசதியையும் மேம்படுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினர்.

தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் இந்த முக்கியச் சாலையில், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த நெடுஞ்சாலைத் துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Students Protest : தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
தேர்வை முழுமையாக ரத்து செய்யனும்.! இன்று சட்டமன்ற முற்றுகை உறுதி - ஜார்க்கண்டில் மாணவர்கள் அதிரடி அறிவிப்பு
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Embed widget