687 நாட்களுக்கு பிறகு நாகை- திருச்சி இடையே மீண்டும் தொடங்கிய ரயில் சேவை
சாதாரண ரயிலில் நாகையில் இருந்து திருச்சிக்கு செல்ல 30 ரூபாய் பயண கட்டணம் இருந்த நிலையில் தற்சமயம் 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது
உலகம் முழுவதும் அச்சுறுத்திய கொரோனா பரவல்காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் முழு முடக்கம் அப்போது அறிவித்திருந்தது, கொரோனா முதலா
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நீட் தேர்வை ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம் - கரூர் பரப்புரை கூட்டத்தில் உதயநிதி உறுதி
இந்த ரயில் சிறப்பு விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது இந்த ரயில் சேவையை தொடங்கும் விதமாக இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பாக நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் ரயில் எஞ்சினுக்கு மாலை அணிவிக்கப்பட்டு நாகப்பட்டினம் ரயில் நிலையம் மேலாளர், லோகோ பைலட், அசிஸ்டென்ட் லோகோ பைலட், காவலர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. பின்னர் ரயிலில் பயணம் செய்த அனைத்து பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.மேலும் ரயில்வே ஊழியர்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா விதிகளை கடைபிடிக்கும் படி பயணிகளை அறிவுறுத்தி வருகின்றனர். முதல் நாளான இன்று ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- காவல்துறை தகுதி தேர்வுக்கு எடையை கூட்டி காட்ட 4 பேண்ட்களை போட்டு வந்த பெண் தகுதி நீக்கம்
இந்த நிலையில் பயணிகள் ரயில் ஆக செயல்பட்டு வந்த ரயில் தற்போது விரைவு ரயில் ஆக செயல்படுவதால் விரைவு ரயிலில் பயணம் செய்வதற்கான பயண கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது சாதாரண ரயிலில் நாகையில் இருந்து திருச்சிக்கு செல்ல 30 ரூபாய் பயண கட்டணம் இருந்த நிலையில் தற்சமயம் 60 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Local body election | தஞ்சை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட்களுக்கு கல்தா கொடுத்த திமுகவினர்