கட்டண சேனல்களின் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்
மார்ச் மாதம் முதல் கேபிள் டிவி மாத கட்டணம் 500 ரூபாய் வரை உயரக்கூடும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
![கட்டண சேனல்களின் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம் Nagapattinam: Tamil Nadu cable TV operators protest to cancel price hike of cable TV pay channels TNN கட்டண சேனல்களின் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/24/4809f2b2e5faaf9d39999566e0f9fecd1677230405902113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கேபிள் டிவி கட்டண சேனல்களின் விலை உயர்வை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விஜய் டிவி, சன் டிவி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் போன்ற பொழுது போக்கு சேன்ல்கள், கார்ட்டூன் நெட்வொர்க், போகோ, டிஸ்கவரி போன்ற சிறுவர்கள் பார்க்க கூடிய கட்டண சேனல்களின் விலையை உயர்த்திக் கொள்ளலாம் என சேனல் முதலாளிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சேனல் முதலாளிகள் தங்களுடைய சேனல் கட்டணங்களை பன்மடங்காக உயர்த்த வாய்ப்புள்ளது. மார்ச் மாதம் முதல் கேபிள் டிவி மாத கட்டணம் 500 ரூபாய் வரை உயரக்கூடும். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதனால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள கட்டண உயர்வு அனுமதியை உடனடியாக ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் ஆசைத்தம்பி, மாவட்டச் செயலாளர் பாப்பாகண்ணன் தலைமையில் நாகை, கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், தலைஞாயிறு, வேதராண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பங்கேற்று கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)