(Source: ECI/ABP News/ABP Majha)
தமிழக மீனவர்களின் உடமைகளை பறித்து கொண்டு விரட்டி அடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்
’’இலங்கை கடற்கொள்ளையர்கள் படகை சூழ்ந்து கொண்டு அவர்களை மிரட்டி 75 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ எடையுள்ள வலைகளை பறித்து கொண்டு அங்கிருந்து விரட்டியடித்தனர்’’
இதேபோல் நேற்று நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தை கிருஷ்ணசாமி படகில் சென்ற நான்கு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு நான்கு அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 13 பேர் புஷ்பவனம் மீனவர்களின் படகில் கண்ணிமைக்கும் நேரத்தில் அதிரடியாக ஏறி விஜேயேந்திரனை வீச்சருவாளின் பின்புறத்தால் தாக்கி இரண்டு செல்போன்கள் இரண்டு லட்சம் மதிப்புள்ள 400 கிலோ வலைகளை பறித்த சென்றனர்.
மேலும் மற்றோரு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வடிவழகி என்பவரின் படகில் ஜெயபால், தங்கதுரை, நீலமேகம் ஆகியோர் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் படகை சூழ்ந்து கொண்டு அவர்களை மிரட்டி 75 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ எடையுள்ள வலைகளை பறித்து கொண்டு அங்கிருந்து விரட்டியடித்தனர். இந்திய கடற்பரப்பில் அச்சத்தோடு மீன்பிடி தொழில் செய்யும் நிலை உருவாகியுள்ளதால் மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கரை திரும்பிய மீனவர்கள் மிரட்சியோடு கவலை தெரிவித்தனர்.இச்சம்பவம் குறித்து மீன்வளத் துறை அதிகாரிகளும் கடலோர காவல் படை போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.