Nagapattinam : மாண்டஸ் புயல் காரணமாக விளைநிலங்களுக்குள் புகுந்த கடல்நீர்; விவசாயிகள் வேதனை!
நல்லூரில் மாண்டஸ் புயல் காரணமாக விளைநிலங்களுக்குள் புகுந்த கடல்நீர்
நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் மாண்டஸ் புயல் காரணமாக விளைநிலங்களுக்குள் புகுந்த கடல்நீர்; 100 ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் சேதம் அடைந்ததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் மாண்டஸ் புயல் காரணமாக கடல் கடுமையாக சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், பல்வேறு கடலோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்தது. அதன் ஒரு பகுதியாக வடக்குபொய்கைநல்லூர் ஊராட்சியில் கடலோரமுள்ள மண்டுவாகரை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள
சுமார் 100 ஏக்கருக்கும் அதிகமான சம்பா, கடலை, கத்தரி உள்ளிட்ட சாகுபடி செய்துள்ள விளை நிலங்களுக்கு கடல் நீர் உட்புகுந்ததாக விவசாயிகள் வேதனை தெரித்துள்ளனர்.
கல்லாரில் பாலம் கட்டுமான பணிக்காக அடைக்கப்பட்ட தடுப்புகள் மற்றும் மணல் திட்டுகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளதால் கடல் நீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதுகவும்.புயல் கரையை கடந்து 5 நாட்களாகியும் கடல் நீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேலும் கடல் நீர் உட்புகுந்ததின் காரணமாக தொடர்ந்து 5 ஆண்டுக்கு தங்களது விளை நிலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு மட்டுமின்றி, தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு தொழில்நுட்ப வல்லூர்கள் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக கடல் நீர் உட்புகாமல் இருக்க கருங்கற்களால் தடுப்பு சுவர் அமைக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜிடம் கேட்டபோது உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலரை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் வாசிக்க..
“கருணாநிதியை விட ஸ்டாலின் இல்லை; ஸ்டாலினை விட உதயநிதி...” - புகழ்ந்து தள்ளிய கரு. பழனியப்பன்..!