மேலும் அறிய
Advertisement
திருச்சி போகனும் பிளாட்பாரம் எங்கே..? - மது மயக்கத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்தவர் அலப்பறை
கண்ணை மறைத்த மது மயக்கம் ரயில் நிலையமென ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்து அலப்பறை. திருச்சி செல்ல பிளாட்பாரம் எங்கே என கேள்வி.
வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த நபர், மதுபோதையில் ரயில் நிலையம் என்று நினைத்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை மாவட்டத்தில் வேளாங்கண்ணி மற்றும் நாகூர் என சுற்றுலா வந்த பயணி ஒருவர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே உள்ள வாஞ்சூரில் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேறிய நிலையில் தனது மணி பர்ஸ் மற்றும் உடைகள் எடுத்து வந்த பையும் தவறவிட்டுள்ளார்.
இதனால், செய்வதறியாமல் திருச்சிக்கு ரயில் ஏறி அங்கிருந்து திண்டுக்கல் செல்ல திட்டமிட்டு ரயில் நிலையம் சென்றுள்ளார். ஆனால் அவர் சென்ற இடம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். இது, ஆட்சியர் அலுவலகமா..? ரயில் நிலையமா? என தெரியாமல் ஆட்சியர் அலுவலகத்தில் தள்ளாடியபடி நுழைந்தார். அப்போது, அவர் திருச்சி செல்ல வேண்டும் பிளாட்பாரம் எங்கே என கேட்டு அலப்பறையில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவரை அப்புறப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion