மேலும் அறிய
17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிவிட்டு இளைஞர் தலைமறைவு
சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான தீபக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இந்திராணி ஆகிய வரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்
![17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிவிட்டு இளைஞர் தலைமறைவு Nagapattinam: A 17-year-old girl got married and got pregnant and the youth disappeared 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிவிட்டு இளைஞர் தலைமறைவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/01/9c44487fa4543eddb0f9d67ab639b354_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கீழ்வேளூர், நாகப்பட்டினம்
நாகையை அடுத்த வடக்கு பொய்கைநல்லூர் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. சிறுமியின் பெற்றோர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த பத்து வருடங்களாக பிரிந்து வாழ்கின்றனர் இந்த நிலையில் சிறுமி தனது தந்தை அரவணைப்பில் இருந்து வருகிறார். ஏழாம் வகுப்பு வரை படித்த சிறுமி நாகப்பட்டினத்தில் உள்ள ஜவுளி கடையில் வேலை பார்த்துள்ளார். அப்போது கீழ்வேளூர் அரசாணிகுளம் தெற்கு மடவிளாகம் பகுதியை சேர்ந்த திருஞானம் மகன் தீபக் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
![17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிவிட்டு இளைஞர் தலைமறைவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/01/89e12852fe2b356479f959339b9ace5e_original.jpg)
இதில் இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் சிறுமிக்கு திருமணம் செய்வதற்காக வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் சிறுமி ஆசை வார்த்தை கூறி வீட்டை விட்டு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமிக்கும் தீபக்கிற்கும் தீபக்கின் பெரியம்மா இந்திராணி திருமணம் செய்து வைத்துள்ளார். இந்திராணி வீட்டிலேயே இருவரும் தங்கி இருந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன் திருப்பூர் வேலைக்கு செல்வதாக கூறி சென்ற தீபக் மீண்டும் வீடு திரும்பவில்லை.
![17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிவிட்டு இளைஞர் தலைமறைவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/01/e987c090cc2f5addcab15616a87dc7ce_original.jpg)
ராமநாதபுரத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா கைது
இதனையடுத்து சிறுமி விசாரித்ததில் தீபக் தன்னை ஏமாற்றி கர்ப்பமாக்கியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நாகப்பட்டினம் மகளிர் காவல் நிலையத்தில் 9 மாத கர்ப்பிணியான சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சிறுமியை கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான தீபக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த இந்திராணி ஆகிய வரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion