சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கம்....அடிமாட்டு விலைக்கு நிலத்தை கேட்பதாக நாகை விவசாயிகள் குற்றச்சாட்டு..!
நாகையில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கத்திற்காக விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
நாகையில் சிபிசிஎல் நிறுவனம் விரிவாக்கத்திற்காக விவசாயிகளின் நிலத்தை அடிமாட்டு விலைக்கு கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்றும், நில உரிமையாளர்கள் படித்தவர்கள் குடும்பத்திற்கு வேலைவாய்ப்பு வழங்க உறுதி அளிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டம் முட்டம் ஊராட்சியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான சிபிசிஎல் நிறுவன விரிவாக்க பணி திட்டத்திற்காக அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 690 ஏக்கர் விலை நிலங்களை கையகப்படுத்த உள்ளனர். இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் அப்பகுதி விவசாயிகள் இன்று பனங்குடி ஊராட்சியில் உள்ள சமுதாய கூடத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திடீர் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் நிறுவனத் தலைவர் திருப்பூர் ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளின் இயக்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி விவசாயிகளின் கூட்டு இயக்க மாநில தலைவர் ரவீந்திரன் உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர் .
நில உரிமையாளர்கள் தங்கள் நிலத்திற்கு நியாயமான இழப்பீட்டுத் தொகை வழங்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் சிபிசிஎல் நிறுவனம் விவசாயிகளை நசுக்கும் போராட்டத்திற்கு தடை விதித்து நீதிமன்றத்தில் தடையானைப் பெற்று விவசாயிகளின் போராட்டத்தை முடக்கி வைத்துள்ளது
மீண்டும் சட்டப்படி போராட்டம் நடத்துவது குறித்து பனங்குடி, முட்டம், கோபுராஜபுரம், வள்ளப்பாக்கம், நரிமணம்உள்ளிட்ட ஐந்து கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்ட அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைக்கு கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு வழங்கிய அதே இழப்பீட்டுத் தொகையை சிபிசிஎல் நிறுவனமும் வழங்க வேண்டும், நிலத்தை இழந்த விவசாயிகளுக்கு படித்த இளைஞர்களுக்கு அந்நிறுவனத்தின் வேலை வழங்க உறுதி அளிக்க வேண்டும் இல்லாவிட்டால் நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று மீண்டும் போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் கூட்டம் முடிந்து வெளியே வந்த அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும் சட்டப் போராட்டமும் கல போராட்டமும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை நடத்தப்படும் எனவும் அப்போது அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.