மேலும் அறிய

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு மணிவிழா கோலாகலம்

திருக்கடையூர் அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சஷ்டியப்தபூர்த்தி விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற பழமையான ஸ்ரீ அபிராமி சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தலத்தில் சுவாமி கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை சம்ஹாரம் செய்த தலம் ஆதலால் இது அட்ட விரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இதனால், இங்கு 60 தொடங்குபவர்கள் 60, 70, 80, 90, 100 வயது பூர்த்தியடைந்தவர்கள் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமங்கள் செய்தும், திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில்  அமைச்சர் சேகர்பாபு மணிவிழா கோலாகலம்

இந்த நம்பிக்கை காரணமாக இக்கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதேபோன்று ஆண்டு முழுவதும் இக்கோயிலில் திருமண வைபவங்கள் நடைபெறுவது வழக்கம். இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க கோயிலில் இன்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு 60 வயது பூர்த்தி அடைந்து 61 வது வயது தொடங்குவதை முன்னிட்டு சஷ்டியப்த பூர்த்தி விழா எனப்படும் மணிவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை திருக்கடையூர் கோயிலுக்கு வந்த சேகர் பாபு, அவரது மனைவி சாந்திக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்பம் மரியாதை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலுக்குள் சென்ற அமைச்சர் கோபூஜை, கஜ பூஜை செய்தனர்.

Ban Vs Afg World Cup 2023: உலகக் கோப்பையில் ஆசிய அணிகள் பலப்பரீட்சை: வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதல்

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில்  அமைச்சர் சேகர்பாபு மணிவிழா கோலாகலம்

பின்னர் நூற்றுக்கால் மண்டபத்தில் நடைபெற்ற முதல் கால யாக பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து இன்று காலை சஷ்டியப்த பூர்த்தி சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் சேகர்பாபு, அவரது மனைவி சாந்தி ஆகியோருக்கு கலசபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் சேகர்பாபு பட்டு வேட்டி சட்டை அணிந்து, ஸ்ரீ சூரணம் திலகம் தரித்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க அவரது மனைவி சாந்திக்கு திருமாங்கல்யம் அணிவித்தார். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு தம்பதியர் சுவாமி, அம்பாள், கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தினர்.

MG Car Price: அடேங்கப்பா, ரூ.2.30 லட்சம் வரை விலையை குறைத்த எம்ஜி நிறுவனம்..! எந்தெந்த மாடல்களுக்கு தெரியுமா?

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில்  அமைச்சர் சேகர்பாபு மணிவிழா கோலாகலம்

இந்நிகழ்ச்சியில் அமைச்சரின் மகன்கள் ஜெயசிம்மன், விக்னேஷ் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் கோயிலுக்கு வந்த பெண் பக்தர்களுக்கு புடவையுடன் மங்களப் பொருட்களை தம்பதியினராக வழங்கினர். சஷ்டியப்த பூர்த்தி விழாவை திருக்கடையூர் கணேஷ், மகேஷ் குருக்கல்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்து வைத்தனர். சஷ்டி அப்த பூர்த்தி விழாவை முன்னிட்டு அமைச்சர் சேகர்பாபுவுக்கு தருமபுரம் ஆதீனம் சார்பில் ஆதீன கட்டளை   ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் தலைமையில் ஆதீன கோயில்களின் தலைமை கண்காணிப்பாளர் மணி திருக்கடையூர் கோயில் உள்துறை கண்காணிப்பாளர் விருதகிரி ஆகியோர் பிரசாதங்களை வழங்கினர்.

Shakib Al Hasan: இன்று 41 ரன்கள் எடுத்தால், நம்பர் 1 இடம்.. உலகக் கோப்பை வரலாற்றில் புதிய சாதனைக்கு காத்திருக்கும் ஷகிப்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!
Embed widget