மேலும் அறிய

இருப்பவர்களிடம் எடுத்து, இல்லாதவருக்கு கொடுப்போம் - அமைச்சர் சேகர் பாபு!

தமிழ்நாட்டில் கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்களின் குத்தகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருவெண்காட்டில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார். அப்போது பள்ளிக்கான தேவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வை முடித்துவிட்டு பெண்கள் உயர்நிலை பள்ளிக்கு செல்லும் வழியில் அமைச்சருக்கு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோயில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் கோபுர தரிசனம் செய்துவிட்டு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் உயர்நிலைப்பள்ளி கட்டிடங்கள், கழிப்பறைகள் பழுது நீக்கம் செய்ய 1 கோடியே 70 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனைக்கொண்டு ஒரு மாதத்திற்குள் பழுதடைந்த கட்டிடங்கள் மற்றும் கழிப்பறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

இருப்பவர்களிடம் எடுத்து, இல்லாதவருக்கு கொடுப்போம் - அமைச்சர் சேகர் பாபு!

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலத்தை மீட்டெடுக்கவும், வாடகை வசூல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மக்களின் நிலைமையை அறிந்து நிலத்தை மீட்க முயற்சி எடுக்கப்படும். இருப்பவர்களிடம் எடுத்து, இல்லாதவருக்கு கொடுப்போம் என்ற தாரக மந்திரத்துடன் செயல்பட்டு வருகிறோம். கோயில் நிலங்களில் விவசாயம் செய்பவர்கள் குத்தகை சாகுபடி பாக்கி வைத்திருப்பது குறித்து கண்டறிந்து, குத்தகை பாக்கி வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கோவில் சொத்துக்கள் குறித்த விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. கோயில் அறங்காவலர் தலைவர் பதவி ஆன்மீக பணியில் ஈடுபடுபவர்களை நியமனம் செய்வோம். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பணிக்கு 207 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். இவர்களில் தகுதி உடையவர்களுக்கு பணி வழங்கப்படும்.

இருப்பவர்களிடம் எடுத்து, இல்லாதவருக்கு கொடுப்போம் - அமைச்சர் சேகர் பாபு!

3 கமிட்டிகள் ஒப்புதல் தந்த பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடியும். இதனால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்து விரைவில் அனுமதி பெற்று கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த முயற்சி செய்யப்படும். கொரோனா நிவாரண நிதி அனைத்து கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, இணை ஆணையர் அசோக்குமார் உதவி ஆணையர் இளையராஜா, எம்.எல்.ஏ-க்கள் பூம்புகார் நிவேதா முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் மயிலாடுதுறை ராஜகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தலைப்பு செய்திகள்

திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Pulsar N160 S-N160 SS First Look: அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
அதிக சக்தி, புதிய அம்சங்கள்; புதிய பஜாஜ் பல்சர் N160 S, N160 SS எப்படி இருக்கு.? இதோ முதல் பார்வை
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
''போர் முடிவுக்கு வரும், ஆனா அதுக்கு ட்ரம்ப் ஒரு உத்தரவாதம் கொடுக்கணும்.!'' ஈரான் அதிபர் கேட்பது என்ன.?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Embed widget