மேலும் அறிய

பொருளாதார முன்னேற்றத்தில் உலக அளவில் இந்தியா 5வது இடத்தை பெற்றுள்ளது - அமைச்சர்  சர்பானந்த சோனோவால்

மயிலாடுதுறை நடைபெற்ற நிகழ்ச்சி பொருளாதார முன்னேற்றத்தில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளதாக அமைச்சர் சர்பானந்த சோனோவால் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா நிகழ்ச்சியில் ஒன்பதரை ஆண்டுகளில் ஏழைகளை பொருளாதார ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பிரதமர் அளித்த வாக்குறுதி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதால் பொருளாதார முன்னேற்றத்தில் உலக அளவில் இந்தியா ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது என்று மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை மற்றும் ஆயுஷ்த்துறை அமைச்சர்  சர்பானந்த சோனோவால் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் உதவிகளை வழங்கி பேசினார்.  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார் கோயிலில் உள்ள தனியார்  கல்லூரியில் நமது லட்சியம்  வளர்ச்சி அடைந்த பாரதம் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரை  நிகழ்ச்சி நடைபெற்றது. 

பொருளாதார முன்னேற்றத்தில் உலக அளவில் இந்தியா 5வது இடத்தை பெற்றுள்ளது - அமைச்சர்  சர்பானந்த சோனோவால்

இதில் மத்திய துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை மற்றும் ஆயுஷ்த்துறை அமைச்சர்  சர்பானந்த சோனோவால் கலந்து கொண்டு  வளர்ச்சி அடைந்த பாரதம் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரை விழிப்புணர்வு பிரச்சார வாகனம் மற்றும் அஞ்சல் துறை மூலம் அமைக்கப்பட்டிருந்த அரங்குகள், விவசாயிகளுக்காக ட்ரோன் மூலம் நானோ யூரியா தெளிக்கும் செயல் விளக்கம், உள்ளிட்டவற்றை பார்வையிட்ட பின்னர் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மத்திய அரசு பிரதமரின் வீட்டுவசதி, முத்ரா கடன், சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவி, விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு, வேளாண் கடன் அட்டை  உள்ளிட்ட திட்டங்களில் பயனடைந்தவர்கள் இந்த திட்டங்களால் தங்களின் வாழ்க்கைத் தரம் எவ்வாறு உயர்ந்துள்ளது. அதனால் கிடைத்த நன்மைகள் குறித்தும் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை எல்லோரும் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்று  பயனாளர்கள் பேசினர்.

பொருளாதார முன்னேற்றத்தில் உலக அளவில் இந்தியா 5வது இடத்தை பெற்றுள்ளது - அமைச்சர்  சர்பானந்த சோனோவால்

அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் கூறியதாவது, தமிழ்நாடு என்பது பாரம்பரியம் பாதுகாப்பு கலாச்சாரமிக்க சோழர்கள் வாழ்ந்த நாடு இதில் அப்துல் கலாம், திருவள்ளுவர் ராமானுஜம, எம்ஜிஆர், கமலஹாசன், சுந்தர் பிச்சை  உள்ளிட்ட  பல்வேறு ஆளுமைகள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நாடு தான் தமிழ்நாடு. இந்த ஒன்பதரை ஆண்டுகளில் ஏழைகளை பொருளாதார ரீதியாக மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. கழிப்பறை வசதி இல்லாத வீடுகளில் கழிப்பறைவசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்கள், அடித்தட்டு மக்கள் முன்னேற வேண்டும் நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக அனுதினமும் உழைப்பவர் தான் நமது பாரத பிரதமர் மோடி. பிரதமர் மோடியின் ஒன்பதரை ஆண்டு ஆட்சியில் 80 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் உணவு பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார முன்னேற்றத்தில் உலக அளவில் இந்தியா 5வது இடத்தை பெற்றுள்ளது - அமைச்சர்  சர்பானந்த சோனோவால்

ஏழை எளிய மக்கள் அனைவரும் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டுமென்ற பிரதமர் மோடியின் தலைமைப் பண்பில் ஆன பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் இன்று உலக அளவில் இந்தியா ஐந்தாவது பொருளாதாரம் நாடாக வளர்ச்சி கண்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்தவர்கள் பற்றி தெரிந்து கொள்வதற்கும் மத்திய அரசின் திட்டங்களில் பயனடையாதோர் பயனடைவதற்கும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரை விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

பொருளாதார முன்னேற்றத்தில் உலக அளவில் இந்தியா 5வது இடத்தை பெற்றுள்ளது - அமைச்சர்  சர்பானந்த சோனோவால்

முன்னதாக அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த வாகனத்தில் ஜெனரேட்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு தீயணைப்புத்துறையால் அணைக்கப்பட்டது மீண்டும் பிரச்சார வாகனம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பயனடைந்த பல்வேறு மாநில அளவில் உள்ள பயனாளிகளுடன் காணொலி மூலம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால், மாநில துணை பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், மற்றும் பல்வேறு வங்கி மேலாளர்கள், மாவட்டத் தலைவர் அகோரம் மற்றும் பாஜக கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Breaking News LIVE 18th NOV 2024: விடாமல் பெய்யும் மழை! தஞ்சையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?
GRAP Stage 4 In Delhi-NCR: ஆபத்து..! டெல்லியில் அமலுக்கு வந்த க்ராப் 4 கட்டுப்பாடுகள் - எதற்கெல்லாம் தடை தெரியுமா?
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Embed widget