தஞ்சையில் அமைச்சர் கே.என்.நேரு திடீர் ஆய்வு.. பரபரப்பான அதிகாரிகள் என்ன காரணம்?
இதற்கான இடத்தை இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சிலை அமைக்கும் இடம் சரியானதாக இருக்குமா என்று பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை நடத்தினார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கருணாநிதி சிலை அமைக்க அமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் வந்து இடத்தை ஆய்வு செய்தார்.
தஞ்சாவூருக்கு ஜூன் மாதம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு மாநகராட்சி இடத்தில் சிலை அமைத்து திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஏற்கெனவே தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருக்கு சிலைகள் உள்ளது. தற்போது அந்த இடத்தில் கருணாநிதிக்கும் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடத்தை இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சிலை அமைக்கும் இடம் சரியானதாக இருக்குமா என்று பார்வையிட்டு ஆய்வு செய்து திமுகவினரிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆய்வின்போது, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், எம்பிக்கள் ச.முரசொலி, சு.கல்யாணசுந்தரம், எம்எல்ஏக்கள் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
கடந்த 9ம் தேதி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் அடுத்தமாதம் தஞ்சாவூருக்கு வருகை தந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வர உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது திமுக முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமாக கலைஞர் கருணாநிதி சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதற்காகவே அமைச்சர் கே.என். நேரு திடீர் ஆய்வு மேற்கொண்டு கலைஞர் சிலையை தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் எந்த பகுதியில் வைக்கலாம் என்று ஆலோசனை நடத்தியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
பஞ்சப்பூர் பேருந்து நிலைய முனையம் திறப்பு விழாவை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி காட்டிய நிலையில் தஞ்சையில் கலைஞர் சிலையை சிறப்பான முறையில் செய்து முடிக்க வேண்டும் என்று ஆலோசனையும் நடத்தி உள்ளார் அமைச்சர் கே.என்.நேரு என்று தெரிய வந்துள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் அண்ணா சிலையும், பெரியார் சிலையும் உள்ள நிலையில் கலைஞர் சிலையும் அமைப்பது சிறப்பானது என்று திமுக தொண்டர்கள் பேசி சென்றனர்.





















