மேலும் அறிய

சட்சட்டென்று நடவடிக்கை... மேயர் சண்.ராமநாதனின் துரித செயல்பாட்டிற்கு பெண்கள் பாராட்டு

வெளியூரில் இருந்து குடும்ப சூழலுக்காக பெண்கள் பணிக்கு வருகின்றனர். அவர்களை இரவு நேரத்தில் சீக்கிரமே வீட்டிற்கு அனுப்புங்கள். அவர்கள் பஸ் இல்லாமல் வீட்டிற்கு தாமதமாக செல்கின்றனர்,

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மேயர் சண்.ராமநாதன் எடுத்த நடவடிக்கை பெண்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருக்கிறது. போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன என்று புகார்கள் மாநகராட்சி மேயர் மற்றும் நிர்வாகத்தினருக்கு வந்தது. இதையடுத்து இன்று தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் மேயர் சண்.ராமநாதன் திடீரென ஆய்வு செய்தார்.

அப்போது நடைமேடையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளிடம் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் கடைகளை அமைக்குமாறு அறிவுறுத்தினார். மேலும், நடைமேடைகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆக்கிரமிப்புகளை 3 நாட்களுக்குள் வியாபாரிகள் அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிடில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சட்சட்டென்று நடவடிக்கை... மேயர் சண்.ராமநாதனின் துரித செயல்பாட்டிற்கு பெண்கள் பாராட்டு

பயணிகள் நடந்து செல்லக்கூட இடமில்லாத நிலை உள்ளது என்று தெரிவிக்கின்றனர். மக்களுக்கு இடையூறாக இருக்கவே கூடாது என்று வியாபாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த மாணவர்களிடம் நீங்கள் எந்த பள்ளியில் படிக்கிறீர்கள்? காலதாமதம் ஆகி விட்டது. இன்னும் பள்ளிக்கு செல்லவில்லையா? என விசாரித்தார். பின்னர் கல்விதான் அசைக்க முடியாத செல்வம். எனவே நன்றாக படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். 

மேயர் சண்.ராமநாதன் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளதை கண்ட சில பெண்கள் வேகமாக வந்து அவரிடம் தயங்கியபடியே நின்றனர். உடன் அவர்களை பார்த்த மேயர் சண். ராமநாதன், என்ன விஷயம் சொல்லுங்கள் என்று தெரிவிக்க, அந்த பெண்கள் நாங்கள் தஞ்சையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் வேலை பார்க்கிறோம். நாங்கள் வெளியூரில் இருந்து இங்கு வேலைக்கு வருகிறோம்‌. எங்களுக்கு பணி இரவு 9 மணிக்கு முடிவடையும். அதன் பிறகு, நாங்கள் வீட்டிற்கு செல்வதற்கு நீண்ட நேரம் ஆகிறது. சில நேரத்தில் பஸ் இல்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகிறோம் என்று தெரிவித்தனர்.

அடுத்த நொடியே அந்த ஜவுளிக்கடையின் மேலாளரை மேயர் சண்.ராமநாதன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். வெளியூரில் இருந்து குடும்ப சூழலுக்காக பெண்கள் பணிக்கு வருகின்றனர். அவர்களை இரவு நேரத்தில் சீக்கிரமே வீட்டிற்கு அனுப்புங்கள். அவர்கள் பஸ் இல்லாமல் வீட்டிற்கு தாமதமாக செல்கின்றனர். உங்கள் நிறுவன உரிமையாளரிடம் தெரிவியுங்கள் என்று கூறி உடன் நடவடிக்கை எடுத்தார். சில நிமிடத்திலேயே அந்த ஜவுளி நிறுவன நிர்வாகத்தினர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து வெளியூரிலிருந்து வரும் பெண்களை இரவு 8 மணிக்கு பணி முடித்து வீட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று தகவல் தெரிவித்தனர். மேயர் சண்.ராமநாதனின் இந்த அதிரடி நடவடிக்கை பெண்கள் மத்தியில் பாராட்டுக்களை குவித்தது.

தொடர்ந்து, அங்குள்ள கழிவறைக்குள் சென்று தூய்மையாக இருக்கிறதா? என பார்வையிட்டார். மேலும், பஸ் நிலையத்தின் அனைத்து பகுதிகளுக்கும் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மேயர் சண்.ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தஞ்சை பழைய பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாக வந்த புகாரை அடுத்து இன்று காலை ஆய்வு செய்தோம். அப்போது நடைமேடையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருந்த வியாபாரிகளிடம் பயணிகள் நடந்து செல்ல இடையூறு ஏற்படாத வகையில் கடைகள் அமைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, வருகிற திங்கட்கிழமை இதேப்போல், ஆய்வுக்கு வருவோம். அப்போது அகற்றப்படாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அதேப்போல, நடைமேடைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், அங்குள்ள பொது கழிவறையால் அருகில் உள்ள மண்டபத்தில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, அந்த கழிவறையை வேறு இடத்திற்கு மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி, 25-வது வார்டு கவுன்சிலர் தெட்சிணாமூர்த்தி, நகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். 

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget