(Source: ECI/ABP News/ABP Majha)
துர்கா ஸ்டாலின் வீட்டின் அருகே வைக்கப்பட்ட ட்ரான்ஸ்பார்மர் - பாதுகாப்பு வேலி அமைக்க கோரிக்கை
11 ஆயிரத்து 100 கிலோவாட் மின்சாரம் அபயம் என வெறும் பதாகை மட்டும் மின்மாற்றியின் எழுதி வைத்துள்ள நிலையில் பாதுகாப்பு வேலி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
குறைந்தழுத்த மின் வினியோகத்தால், பொதுமக்களின் வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் பழுதடையாமல் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும், தேவையான இடங்களில் புதிய மின் மாற்றிகளை அமைக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் உள்ள பகுதிகளில் புதிதாக மின் மாற்றி அமைப்பது பழுதடைந்த பழைய மின் மாற்றி களுக்கு பதிலாக புதிதாக மின்மாற்றிகள் நிறுவுவது என மின்சார வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புதிதாக மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அவ்வாறு அமைக்கப்படும் மின்மாற்றிகள் பல இடங்களில் மிகவும் தாழ்வாக உயரம் குறைவாக குழந்தைகள் ஏறி விளையாடும் உயரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டிற்கு அருகாமையில் புதிதாக இரண்டு மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்மாற்றிகள் வழக்கமாக அமைக்கப்படும் உயரத்தில் அமைக்காமல் வெறும் 3 அடி உயரத்தில் சிமெண்ட் கட்டை கட்டி அதில் உயர் மின்னழுத்த மின்மாற்றியை அமைத்துள்ளனர். மக்கள் நடமாடும், குறிப்பாக பள்ளி மாணவர்கள் பலர் கடந்து செல்லும் சாலையின் ஓரம் மிகவும் உயரம் குறைவாக அமைத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
11 ஆயிரத்து 100 கிலோவாட் மின்சாரம் அபயம் என வெறும் பதாகை மட்டும் மின்மாற்றியின் எழுதி வைத்துள்ளனர். உயரம் குறைவாக வைக்கப்பட்டுள்ள மின்மாற்றியை மாற்றி உயரமான இடத்தில் அமைக்க வேண்டும், அல்லது மின்மாற்றியினனை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட வேண்டுமென அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து அப்பகுதி சமூக மக்கள் தெரிவிக்கையில், வழக்கமாக மின்மாற்றிகள் மின் கம்பங்கள் நடப்பட்டு பத்து, பதினைந்து அடி உயரத்திற்கு மேல்தான் அமைப்பார்கள் என்றும், தற்போது மின் ஊழியர்கள் தங்கள் வேலைப்பளுவை குறைப்பதற்கு எளிமையாக வேலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிருடன் விளையாடும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தற்போதுள்ள இந்த தாழ்வான அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றி மழை வெள்ளம் காலங்களில் நேரில் மூழ்கி பெரும் விபத்தை ஏற்படுத்தும் எனவும், பெரும் விபத்து ஏதேனும் நடைபெறும் முன்னர் மின்மாற்றியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்
சேலம் சிலிண்டர் விபத்து: 'எம்.பி நிதியிலிருந்து வீடு கட்டித் தரப்படும்' - பார்த்திபன் எம்.பி உறுதி