மயிலாடுதுறை: இரும்பு உருக்காலையில் இருந்து வெளியேறும் கரும்புகை - அவதிக்குள்ளாகும் பொதுமக்கள்
இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை என்றும் இந்த பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து பாதிப்பு இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மருதூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான ஒபிஜி இரும்பு உருக்கு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும் இரும்பு பொருட்களை உருக்கி ரயில் தண்டவாளம், இரும்பு கம்பிகளாகவும், தகடுகள் உள்ளிட்ட பொருட்கள் செய்யப்படுகிறது. இந்நிலையில் பழைய இரும்பு பொருட்களை உருக்கி கம்பிகளாக மாற்றம் செய்யும்போது அதிலிருந்து அதீத கரும் புகையானது வெளி வருவது வழக்கம்.
இந்த புகையினை பில்டர்கள் அமைத்து உயரமான புகை போக்கி மூலம் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காத வண்ணம் வெளியேற்ற பட்டு வந்தது. ஆனால் கடந்த மூன்று மாத காலமாக பில்டர் மற்றும் புகைபோக்கியில் பழுது காரணமாக இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் புகையானது சரியான முறையில் வெளியேறாமல் ஆலையை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் சூழ்ந்து புகை மண்டலமாக காட்சி அளித்து வருகிறது.
மாணவி தற்கொலை வழக்கில் கைதான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
மேலும் இரும்பு உருக்கு ஆலையில் இருந்து வெளியேறும் அதீத ஆபத்தான புகையால் ஆலையின் அருகே உள்ள மருத்தூர், தேரழந்தூர், கோமல், கோட்டகம், கொழையூர் உள்ளிட்ட10 க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்கள் என பலரும் ஆஸ்துமா, மூச்சு திணறல், புற்றுநோய் உள்ளிட்ட ஆட்கொல்லி நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தெய்வ நம்பிக்கை இல்லாத அரசால் கோயிலுக்கு எப்படி நன்மை நடக்கும்’ - வானதி சீனிவாசன்!
மேலும் இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனை தெரிவிக்கும் இப்பகுதி மக்கள், உடனடியாக மாசு கட்டுப்பாட்டு துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் இப்பகுதியை ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அது மற்றும் இன்றி மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகள் குறித்து கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் இதனை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு சுற்றுச்சூழல் துறை நாகப்பட்டினம் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலம் அவரிடம் கேட்டதற்கு இது குறித்து எவ்வித புகார் வரவில்லை என்றும் இந்த பாதிப்பு குறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து பாதிப்பு இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
பணம் மற்றும் ஸ்மார்ட் போனுடன் கீழே கிடந்த கைப்பையை காவல்துறையிடம் ஒப்படைத்த தம்பதி!