மேலும் அறிய

சுதந்திரம் கிடைத்ததில் இருந்து சாலையையே கண்டிராத கிராமம் - சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம்

மயிலாடுதுறை அருகே சுதந்திரம் கிடைத்ததில் இருந்து சாலையை பார்த்ததில்லை என கிராமம் மக்கள் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே சுதந்திரம் கிடைத்ததில் இருந்து சாலையை பார்த்ததில்லை எனவும், உடனடியாக சாலை அமைந்துதர கோரி கிராமம் மக்கள் சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆறுபாதி ஊராட்சி ஈஸ்வரன்கோயில் கிராமத்தில் சுமார் 150 மேற்பட்ட ஏழை எளிய குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  மயிலாடுதுறை தரங்கம்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களையும் இணைக்கும் வகையில் ஈஸ்வரன் கோயில் குளிச்சார் கிராமங்களை இணைக்கும் 200 மீட்டர் இணைப்புச் சாலை உள்ளது. இந்த சாலையை மட்டும் இந்தியா சுகாதாரம் அடைந்த நாள் முதல் 70 ஆண்டுகளுக்கு மேலாக செப்பனிடப்படமால் மண் சாலையாகவே இருந்து வருகிறது. 

சுதந்திரம் கிடைத்ததில் இருந்து சாலையையே கண்டிராத கிராமம் - சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம்

இரண்டு கிராமத்திற்கும் மற்ற இடங்களில் பலமுறை சாலை வசதி ஏற்படுத்தி செப்பனிடப்பட்டாலும், இந்த 200 மீட்டர் இணைப்புச் சாலை மட்டும் சீரமைக்கப்படாமல் கிடப்பில்  போடப்பட்டு வருகிறது. இதனால் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாகிவிடுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இந்த 200 மீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைக்க அரசுத்துறை அதிகாரிகள் முன்வரவில்லை என அக்கிராம மக்கள் குற்றச்சாட்டை தெரிவிக்கின்றனர். மேலும் சேரும் சகதியமான சாலையில் நடந்தோ அல்லது  இருசக்கர வாகனங்களை கூட  ஓட்டி செல்ல முடியாத நிலையை உள்ளது. சைக்கிளை கையில் தூக்கிக்கொண்டு நடந்து சென்று சாலையை கடக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

Uttarkashi Tunnel Disaster: என்ன! 41 பேரின் உயிரை காப்பாற்ற பயன்படுத்தப்பட்டது தடை செய்யப்பட்ட ‘எலி வளை சுரங்க முறையா?’

சுதந்திரம் கிடைத்ததில் இருந்து சாலையையே கண்டிராத கிராமம் - சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம்

அதுமட்டுமின்றி சாலை இல்லாததால்  இந்த வழியில் மழைநீர் தேங்கி வீடுகளில் பாம்புகள் உள்ளி விஷ ஜந்துக்கள் உட்புகுவதாகவும், கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.  குளிச்சாறு கிராமத்திலிருந்து ஆறுபாதி கிராமத்தில் உள்ள  பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் இதனால் பல இன்னல்களுக்கு நடுவே சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சில சமயங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள் சேற்றில் வழுக்கி விழுந்து  மாணவர்களின் சீருடை மற்றும் வீணாகுவது மட்டும் இன்றி அவர்களுக்கு காயங்களும் ஏற்பட்டு வருகிறது.

Maruti Suzuki Price Hike: மீண்டும் கார்களின் விலையை ஏற்றும் மாருதி சுசுகி.. எப்போது? எவ்வளவு தெரியுமா?

சுதந்திரம் கிடைத்ததில் இருந்து சாலையையே கண்டிராத கிராமம் - சேறும், சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டம்

இந்த சூழலில் வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்துவரும் மழையால்  ஒருநாள் கனமழையில் கூட சாலை சேரும் சகதியமாக மாறிவிடுவதாகவும், இந்த சிரமத்தில் இருந்து தங்களை காக்க உடனடியாக சாலையை செப்பனிட வேண்டும் என்று கூறி கிராம மக்கள் ஏராளமானோர்  சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.  200 மீட்டர் தூரம் சாலையை போர்க்கால அடிப்படையில் செப்பனிட்டு தர வேண்டும் என்று அப்போது அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த சாலையினை கடந்த சில மாதங்களுக்கு முன் அமைச்சர் மெய்யநாதன் நேரில் ஆய்வு செய்து சென்றதாகவும், ஆனால் அதும் எந்த பலனையும் அளிக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

Minister Kiren Rijiju: உனக்கென்ன வேணும் சொல்லு.. மகளுக்காக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ - க்யூட் வீடியோ!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Arvind Kejriwal: வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
கெஜ்ரிவாலை ஓடவிட்டபாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம்  - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம் - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Erode Election Result LIVE : உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
Erode Election Result LIVE : உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Story of Parvesh Verma BJP | கெஜ்ரிவாலுக்கு தண்ணி காட்டியவர்.. டெல்லியின் முதல்வராகும் பர்வேஷ் சிங்?Manapparai School Issue | குழந்தைக்கு பாலியல் தொல்லைஅதிரடி காட்டிய போலீஸ் மணப்பாறை பள்ளியில் பகீர்!Arvind Kejriwal Trails | தோல்வியை நோக்கி கெஜ்ரிவால் காலரை தூக்கும் பாஜக பழிவாங்கிய காங்கிரஸ்! | New DehliPregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Arvind Kejriwal: வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
வெற்றி கொடுக்காத டெல்லி மக்களுக்கு இதை செய்வேன்... கெஜ்ரிவால் கூறியது என்ன.?
Delhi Election Result 2025: கெஜ்ரிவாலை ஓடவிட்ட பாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
கெஜ்ரிவாலை ஓடவிட்டபாஜக வேட்பாளர்... யார் இந்த பர்வேஷ் வர்மா.?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம்  - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Delhi Election Result 2025: ஆம் ஆத்மி மட்டுமில்ல.. கெஜ்ரிவால் கூட வேண்டாம் - டெல்லி படுதோல்விக்கான காரணங்கள் என்ன?
Erode Election Result LIVE : உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
Erode Election Result LIVE : உறுதியான வெற்றி! பட்டாசு வெடித்தும், ஆட்டம் போட்டும் கொண்டாடும் தி.மு.க.
Erode East By Election Result: எகிறி அடித்த திமுக!  டெபாசிட் வாங்குமா நாதக... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 2025
Erode East By Election Result: எகிறி அடித்த திமுக! டெபாசிட் வாங்குமா நாதக... ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் 2025
Headlines: டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி! ஈரோட்டில் தி.மு.க. வெற்றி - இந்தியாவில் இதுவரை
Headlines: டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி! ஈரோட்டில் தி.மு.க. வெற்றி - இந்தியாவில் இதுவரை
Delhi Election Result 2025: ஹாட்ரிக் டக்-அவுட்டா? கணக்கை தொடங்குமா காங்கிரஸ்? டெல்லியில் தொண்டர்கள் ஏக்கம்..!
Delhi Election Result 2025: ஹாட்ரிக் டக்-அவுட்டா? கணக்கை தொடங்குமா காங்கிரஸ்? டெல்லியில் தொண்டர்கள் ஏக்கம்..!
Delhi Election Result 2025 LIVE: பாஜக வசம் தலைநகரம் - முக்கிய தலைகளை இழந்த ஆம் ஆத்மி, யார் யார் தெரியுமா?
Delhi Election Result 2025 LIVE: பாஜக வசம் தலைநகரம் - முக்கிய தலைகளை இழந்த ஆம் ஆத்மி, யார் யார் தெரியுமா?
Embed widget