இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் - தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக தரங்கம்பாடி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்
தரங்கம்பாடி மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து தாக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தரங்கம்பாடி பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி சாதாரண கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி குமரவேல் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட தங்கள் பகுதியின் தேவைகள் குறித்து பேசினர். இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானமாக தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மீனவர்கள் கடந்த வாரம் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து தரங்கம்பாடி பகுதி மீனவர்கள் தாக்கப்பட்டு வருவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் வழங்கி, தாக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க அரசிடம் வலியுறுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Vellore: பைக் ரேசில் உயிரிழந்த மகன்; கணவனை இழந்து மகனே உலகம் என வாழ்ந்த தாயின் துயர முடிவு
மயிலாடுதுறை நகராட்சி நகர்மன்ற கூட்டத்தில் மஞ்சள்பை திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் அதிக அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வார்டு உறுப்பினர் குற்றச்சாட்டு!
மயிலாடுதுறை நகராட்சி நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 36 வார்டு உறுப்பினர்கள் கலந்து பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட மஞ்சள் பைத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் 23 வது வார்டு அதிமுக உறுப்பினர் சதீஷ்குமார் குற்றம் சாட்டினார்.
MKS70: உலக அளவில் ட்ரெண்ட் ஆன முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள்; என்னனு நீங்களே பாருங்க..!
மயிலாடுதுறை நகராட்சியில் தமிழ் வாழ்க என்ற லைட்டிங் போர்டு வைக்க வேண்டும் என்றும், நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 35 வது வார்டு பாட்டாளி மக்கள் கட்சி நகர மன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனது அடுத்த விண்வெளி வீரர்களை தேர்வு செய்துள்ள ஜப்பான்: நிலாவுக்கு மனிதர்களை அனுப்பத் திட்டம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்