கொள்ளிடம் அருகே நாய்களிடம் சிக்கிய புள்ளி மானை மீட்ட கிராம மக்கள்
கொள்ளிடம் அருகே நாய்கள் கடித்ததில் காயம் அடைந்த புள்ளி மானை வனத்துறையினர் மீட்டு சிகிச்சைக்கு பின் காப்பு காட்டில் விட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் புள்ளிமான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் 3 வயது உடைய ஆண் புள்ளி மான் ஒன்று வழி தவறி ஆச்சாள்புரம் கொடிவேலி பகுதிக்கு வந்துள்ளது. அப்போது அதனை கண்ட அப்பகுதி நாய்கள் மானை துரத்தி கண்டித்துள்ளது. அதில் அச்சமடைந்த அந்த மான் உயிர்பிழைக்க நாய் கடித்து காயங்களுடன் அருகில் இருந்த ஒரு வீட்டினுள் புகுந்துள்ளது. அதனை அடுத்து அப்பகுதியில் மக்கள் நாய்களை விரட்டிவிட்டு மானை வீட்டுக்குள்ளேயே வைத்து பாதுகாத்தனர்.
மேலும் இதுகுறித்து அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் வினோஷா கருணாகரன் சீர்காழி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் அளிதாதுள்ளார். இந்த தகவலையடுத்து சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று மானை மீட்டு, வனத்துறை வாகனத்தில் ஏற்றி சீர்காழி அரசு கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்து, சிகிச்சை அளித்தனர். பின்னர், நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை காப்பு காட்டில் மானை வாகனத்தில் ஏற்றி விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Richest Party: நாட்டின் பணக்கார அரசியல் கட்சி எது..? - முதல் 2 இடங்கள் இவர்களுக்கு தான்
மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில், 2024 -ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பூத் கமிட்டி உறுப்பினர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தஞ்சாவூர் மற்றும் கடலூரில் இருந்து வருகை தரும் நிர்வாகிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பது, பாட்டாளி மக்கள் கட்சி செயல்பாடுகள் குறித்து மக்களிடம் தெரியப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது.
இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் லண்டன் அன்பழகன், வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி, மாவட்ட செயலாளர் சக்திவேல், நகர செயலாளர்கள் கமல்ராஜா, குமரேசன், மாநில செயற்குழு உறுப்பினர் காசிபாஸ்கரன் மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.