மேலும் அறிய

சீர்காழி அருகே மழையால் இடிந்த ஓட்டு வீடு - மூன்று பேர் படுகாயம்

சீர்காழி அருகே ஓட்டு வீடு இடிந்து விழுந்து மூன்று பேர் படுகாயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

வங்க கடலில் மையம் கொண்ட மிக்ஜாம் புயல் கரையை நெருங்காத நிலையிலேயே தனது கோரமுகத்தை காட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை பெருவெள்ளத்தில் தத்தளித்து படிப்படியாக, மூழ்கடித்துக் கொண்டிருக்கிறது மிக்ஜாம் கொண்டு வந்த அதீதமழை. மிக்ஜாம் புயலானது சென்னையில் சராசரியாகவும் சரமாரியாகவும் 20 செ.மீ-க்கும் அதிமான மழையை கொட்டிக் கொண்டிருக்கிறது. சென்னை மாநகரின் அத்தனை புறநகர் பகுதிகளிலும் மிக குறைவான மணிநேரங்களில் மிக மிக அதீதமான மழையை கொட்டிவிட்டது மிக்ஜாம் புயல். வடகிழகு பருவமழையானது 6% பற்றாக்குறையாக இருந்தது. ஆனால் நேற்று இரவு முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் 29% கூடுதலாக பருவமழை பதிவாகி இருக்கிறது.

சீர்காழி அருகே மழையால் இடிந்த ஓட்டு வீடு - மூன்று பேர் படுகாயம்

சென்னை புறநகர் பகுதிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பொதுவாகவே மழை காலங்களில் சென்னை மாநகரின் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி தரும். தற்போதைய பெருமழையில் பெரும்பாலான புறநகர்கள் வெள்ளத்தில் மிதந்தும் மூழ்கியும் கொண்டிருக்கின்றன. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இந்த அதீத கனமழையும் வெள்ளமும் எப்போதுதான் ஓயும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்னும் 6 மணிநேரத்துக்கு மழை தொடரத்தான் செய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று மாலைக்குப் பிறகு தான் மெல்ல மெல்ல மழையின் அளவுதான் குறையும் எனவும், ஆனாலும் மழை நீடிக்கும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்காழி அருகே மழையால் இடிந்த ஓட்டு வீடு - மூன்று பேர் படுகாயம்

பின்னிரவில் இருந்துதான் மழை படிப்படியாக குறையும் என்றும், அதாவது சென்னையில் இன்று முழுவதும் மழை தொடரவே செய்யும் என எச்சரித்துள்ளது வானிலை மையம். அதாவது தற்போது சென்னைக்கு கிழக்கே மிக்ஜாம் புயல் வங்க கடலில் நகர்ந்து கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் திடீரென 10, 11 கி.மீ வேகத்தில் நகருகிறது, சில நேரங்களில் மணிகு 8 கி.மீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலையில் மிக்ஜாம் புயல் கரையை கடக்க 6 மணிநேரம் அல்லது 7 மணிநேரம் ஆகும் என்பதால் இந்த கால கட்டத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை அல்லது கனமழை நீடிக்கும் என்கின்றனர் வானிலை ஆய்வாளர்கள். சென்னையில் இருந்து சுமார் 100 அல்லது 150 கிமீ தொலைவுக்கு அப்பால் புயல் நகர்ந்த பின்னர்தான் மழையானது நிற்கும் என கூறப்படுகிறது.

சீர்காழி அருகே மழையால் இடிந்த ஓட்டு வீடு - மூன்று பேர் படுகாயம்

இந்நிலையில் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெருந்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் 50 வயதான ஜமீல்ராஜ் என்பவரது ஓட்டு வீடு மழையில் நனைந்து வீடு முழுவதும் மழை நீரில் ஊறி பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் இன்று வீட்டில் வழக்கம் போல ஜமீல்ராஜ் அவரது மனைவி கமலாதேவி மற்றும் மகள் சுபஸ்ரீ 20 ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென ஓட்டு வீடு இடிந்து உள்ளே விழுந்துள்ளது. இதில் வீட்டிலிருந்த மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் ஓடி வந்து வீட்டில் சிக்கி இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகள் சேர்த்தனர். இதுகுறித்து திருவெண்காடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மழையால் வீடு இடித்து விழுந்து மூன்று பேர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Embed widget