மேலும் அறிய

காங்கிரஸை எதிர்ப்பது போன்று காட்டி பிஜேபியை ஒழிக்க  வேண்டும் - திமுக மாவட்ட துணை செயலாளர் பேச்சு!

காங்கிரஸை எதிர்ப்பது போன்று மாயையை காட்டவேண்டும். அதற்கு காங்கிரஸ் எம்எல்ஏ உதவ வேண்டும் என மயிலாடுதுறை திமுக மாவட்ட துணை செயலாளர் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறுவை சாகுபடிக்காக கடந்த ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் நடப்பாண்டும் செயல்படுத்தப்பட்டதால் வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. காவிரியில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன. எஞ்சிய குறுவை பயிரை பாதுகாத்திடவும், சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கிடவும் தமிழ்நாட்டுக்கு, கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தியும் காவிரி டெல்டா மாவட்டங்களில் பலகட்டப் போராட்டங்கள் நடந்தது.

காங்கிரஸை எதிர்ப்பது போன்று காட்டி பிஜேபியை ஒழிக்க  வேண்டும் - திமுக மாவட்ட துணை செயலாளர் பேச்சு!

தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தின என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்  காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 11 ஆம் தேதி முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்துவது என  முடிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸை எதிர்ப்பது போன்று காட்டி பிஜேபியை ஒழிக்க  வேண்டும் - திமுக மாவட்ட துணை செயலாளர் பேச்சு!

இந்நிலையில் வரும் 11-ம் தேதி கடையடைப்பு மற்றும் மாபெரும் மறியல் போராட்டத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில்  போராட்டம் குறித்து இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் கடந்த  செப்டம்பர் 7 ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற  ஆகஸ்ட் 11-ஆம் தேதி கடையடைப்பு செய்து தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என மயிலாடுதுறையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் நிவேதா.முருகன்  எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜகுமார் எம்எல்ஏ, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸை எதிர்ப்பது போன்று காட்டி பிஜேபியை ஒழிக்க  வேண்டும் - திமுக மாவட்ட துணை செயலாளர் பேச்சு!

இக்கூட்டத்தில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் போராட்டத்தை தூண்டிவிட்டு போராட்டம் நடத்திவரும் பாஜகவை கண்டித்தும், எஞ்சிய குறுவைப் பயிர்களைப் பாதுகாத்திடவும், சம்பா சாகுபடியை தொடங்கிட தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை திறக்க காவிரி ஆணையம் உத்தரவிட வலியுறுத்தியும், தமிழக அரசு பலமுறை வலியுறுத்தியும் பாராமுகமாக செயல்படும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்.11-ஆம் தேதி (புதன்கிழமை) கடையடைப்பு நடத்துவது என்றும் அன்றைய தினம் மயிலாடுதுறை தலைமை அஞ்சலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

காங்கிரஸை எதிர்ப்பது போன்று காட்டி பிஜேபியை ஒழிக்க  வேண்டும் - திமுக மாவட்ட துணை செயலாளர் பேச்சு!

இந்நிலையில் அக்கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் முன்பு திமுக மயிலாடுதுறை மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன் காவிரி பிரச்சினையில் கர்நாடகாவில் காங்கிரஸ் நடிப்பது போன்று நாமும்  காங்கிரஸை எதிர்ப்பது போன்றும்,  எடப்பாடியை மட்டம் தட்டுவது போன்று காட்டி பிஜேபியை ஒழிப்பதே நமது கொள்கையாக இருக்க வேண்டும். அப்போதுதான்  வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறமுடியும். அதனால் நாம் காங்கிரஸை எதிர்ப்பது போன்று மாயையை காட்டவேண்டும், இங்குள்ள காங்கிரஸ் எம்எல்ஏவும் கடுமையாக பேச வேண்டும் அப்போது தான் இங்குள்ள தமிழர்கள்  காங்கிரஸ்காரர்கள் அனைவரும் காவிரி விவகாரத்தில் ஒற்றுமையுடன் இருக்கிறனர் என்ற உணர்வு மக்களிடம் வரவேண்டும், அவ்வாறு வரவேண்டும் என்றால் இங்குள்ள காங்கிரஸ் எம்எல்ஏ ராஜ்குமார் கடுமையாக பேசவேண்டும்.

காங்கிரஸை எதிர்ப்பது போன்று காட்டி பிஜேபியை ஒழிக்க  வேண்டும் - திமுக மாவட்ட துணை செயலாளர் பேச்சு!

அங்குள்ள கர்நாடகர்கள் எவ்வாறு கர்நாடகா உணர்வுடன் இருக்கிறார்களே அதுபோன்று தமிழர்களும் தமிழ் உணர்வுடன் இருப்பதை காண்பிக்க வேண்டாம் என பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ காவிரி நீரை கர்நாடகா தருகின்றதோ இல்லையோ, நாம் போராடுவது போல் நடிக்க வேண்டும். அப்போதுதான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் வாங்க முடியும் என திமுக மாவட்ட துணை செயலாளர் பேசிய பதிவு என  வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் 24-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவை இனங்கள் கண்டறிந்து பதிவு
தஞ்சாவூரில் 24-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவை இனங்கள் கண்டறிந்து பதிவு
கும்பகோணம் அருகே தம்பதிக்கு நேர்ந்த பயங்கர விபரீதம்: பெரும் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்
கும்பகோணம் அருகே தம்பதிக்கு நேர்ந்த பயங்கர விபரீதம்: பெரும் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்
இஸ்ரோவில் நிரந்தர வேலை... மாதம் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம்! என்ன ரெடியா நண்பாஸ்
இஸ்ரோவில் நிரந்தர வேலை... மாதம் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம்! என்ன ரெடியா நண்பாஸ்
இது பனை மரமா? இல்லை தூக்கணாங்குருவிகளின் நகரமா? கும்பகோணம் மக்களின் வியப்பு
இது பனை மரமா? இல்லை தூக்கணாங்குருவிகளின் நகரமா? கும்பகோணம் மக்களின் வியப்பு

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget