மேலும் அறிய

தடையை மீறி ஆடிப்பெருக்கு வழிபாடு; காற்றில் பறந்த கட்டுப்பாடு!

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தடையைமீறி பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழா வழிபாடு செய்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் 2 வது அலையின் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் குர்ஆனோ வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ஆடிப்பெருக்கு, ஆடி கிருத்திகை என கோவில்களில் ஆடி மாத திருவிழாக்களில் மக்கள் அதிகளவு கூடும் சூழல் நிலவுவதால், கோவில் திருவிழாக்கள் மற்றும் மதவழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. 

தடையை மீறி ஆடிப்பெருக்கு வழிபாடு; காற்றில் பறந்த கட்டுப்பாடு!

மேலும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கொரோனா கட்டுப்பாடு குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ஆடி பெருக்கு நிகழ்ச்சியில் பொதுமக்கள் கூட்டம் கூடினால் சமூகஇடைவெளி போன்ற கட்டுப்பாடுகள் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளதால்  கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி முதல் 9 ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்கள் கூட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் ஆடிக்கிருத்திகை மற்றும் ஆடிபெருக்கினை கொண்டாட தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களிலும் பக்தர்களுக்கு வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

தடையை மீறி ஆடிப்பெருக்கு வழிபாடு; காற்றில் பறந்த கட்டுப்பாடு!

இந்நிலையில்  பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு வழிபாடு என்பது மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சூழலில் கடந்த பல ஆண்டுகளாக காவிரி தண்ணீர் துலாக் கட்டத்திற்கு ஆடி பெருக்கன்று வராததை அடுத்து பொதுமக்கள் தண்ணீர் இல்லாமல் முறையாக வழிபாடு செய்ய முடியாமல் தவித்து வந்தனர். தற்போது மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மயிலாடுதுறை காவிரி துலா கட்டம் முழுவதும் நிரம்பி செல்கிறது இதனால் மகிழ்ச்சி அடைந்த மயிலாடுதுறை மாவட்ட மக்கள் இம்முறை சிறப்பான முறையில் ஆடிப்பெருக்கு வழிபாட்டினை காவிரி துலா கட்டத்தில் மேற்கொள்ளலாம் என ஆர்வத்துடன் எதிர்பார்த்து இருந்தனர்.

தடையை மீறி ஆடிப்பெருக்கு வழிபாடு; காற்றில் பறந்த கட்டுப்பாடு!

ஆனால் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மாவட்ட நிர்வாகம் காவிரி துவக்கத்தில் வழிபாடு செய்ய தடை விதித்து இருந்தது. இருந்தபோதிலும் பொதுமக்கள் பலரும் அதனை பொருட்படுத்தாமல்  தடையைமீறி  ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடி வருகின்றனர். காலை முதலே பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் கருகுமணி, வளையல், காப்பரிசி, கண்ணாடி, பழவகைகளை வைத்து, தங்கள் வாழ்வு வளம் பெறவும், விவசாயம் செழிக்கவும் காவிரி அன்னைக்கு வழிபாடு நடத்தி புனித நீராடி வருகின்றனர். மயிலாடுதுறை காவல்துறையினர் கட்டுப்பாடு காரணமாக வழிபாட்டிற்கு தடை விதிக்காமல் பொதுமக்களுக்கு  பாதுகாப்பாக பணியில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆடிக்கிருத்திகை ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கடற்கரை மற்றும் காவிரி கிளை ஆறுகளில் பொதுமக்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் மயிலாடுதுறை  தடை உத்தரவை மீறி ஏராளமான பொதுமக்கள் ஆடிப்பெருக்கை முன்னிட்டு படையலிட்டு வழிபாடு நடத்திவருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

பட்டாசு கடை வைக்க ஆசையா? நாளைதான் கடைசி நாள்! ரூ.600 கட்டணத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
பட்டாசு கடை வைக்க ஆசையா? நாளைதான் கடைசி நாள்! ரூ.600 கட்டணத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது இந்தத் தவறுகளைச் செய்யாதீங்க! புதுக்கோட்டை விவசாயிகளுக்கு வேளாண்துறை முக்கிய எச்சரிக்கை!
பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது இந்தத் தவறுகளைச் செய்யாதீங்க! புதுக்கோட்டை விவசாயிகளுக்கு வேளாண்துறை முக்கிய எச்சரிக்கை!
தஞ்சாவூர் பெரியகோயில் உண்டியல்கள் திறப்பு... கொட்டிக் கொடுத்த பக்தர்கள்: ரூ. 66 லட்சம் கிடைத்தது
தஞ்சாவூர் பெரியகோயில் உண்டியல்கள் திறப்பு... கொட்டிக் கொடுத்த பக்தர்கள்: ரூ. 66 லட்சம் கிடைத்தது
ரூ.5 கோடி லஞ்சப் புகார் எதிரொலி! காவல் ஆய்வாளர் சுகுமாரனுக்கு ஜாமீன் மறுப்பு... திருவையாறு நீதிமன்றம் அதிரடி!
ரூ.5 கோடி லஞ்சப் புகார் எதிரொலி! காவல் ஆய்வாளர் சுகுமாரனுக்கு ஜாமீன் மறுப்பு... திருவையாறு நீதிமன்றம் அதிரடி!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget