முதல்வர் ஸ்டாலினை சந்திக்க 300 கி.மீ., மாற்றுத்திறனாளி நடைபயணம் - எதற்காக தெரியுமா..?
பட்டா மாற்றம் செய்ய கோரி அளித்த மனுவை, நிராகரித்த அதிகாரிகள் குறித்து முதல்வரிடம் முறையிட மயிலாடுதுறையில் இருந்து சென்னை கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ள மாற்றுதிறனாளி.
மயிலாடுதுறையை அடுத்த மன்னம்பந்தல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் சரவணன். மாற்றுத்திறனாளியான இவர் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் தனது தாத்தாவின் இடத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சியில் 1972 ஆம் ஆண்டு தனது தாத்தாவிற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
உங்க கற்பனை! அவங்க கோபமா போகல.. வேலை இருந்துச்சு.. ஒருவொரு வார்த்தையில் பதிலளித்த பொன்னையன்!
ஆனால் தனது தாத்தா உயிரிழந்த நிலையில் அந்த பட்டாவை சரவணன் பெயருக்கு மாற்றுவதற்காக மயிலாடுதுறை வட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார். அப்போது, அந்த இடம் மாயூரநாதர் கோயில் இடத்திற்கு சொந்தமானது என தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து இணையத்தில் ஆவணங்களை சரவணன் சரி பார்த்த போது அது நத்தம் நிலம் என பதிவாகி உள்ளது. அதனைத் தொடர்ந்து சரவணன் தன்னிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகத்தில் அளித்து பெயர் மாற்றம் செய்யக்கோரி மனு அளித்துள்ளார்.
ஆனால் தொடர்ந்து பலமுறை வட்டாட்சியரிடம் மனு அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் மனமுடைந்த சரவணன் மயிலாடுதுறையில் இருந்து சென்னை கோட்டை நோக்கி தனக்கு நீதிகேட்டு முதலமைச்சர் சந்திப்பதற்காக சுமார் 300 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து சரவணன் கூறுகையில், பல ஆண்டுகளாக தங்கள் குடும்பம் அங்கு வீடு கட்டி குடியிருந்து வருவதாகவும், தற்போது வீடு மிகவும் ஆபத்தான நிலையில் பழுதடைந்துள்ளதால் பட்டா பெயர் மாற்றம் செய்து அதன் மூலம் வங்கி கடன் பெற்று வீட்டை சீர் செய்ய முயற்சிப்பதாகவும், தமிழக அரசு இது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது ஜூன் 12-இன் கதை! அதே நாள்..! அதே மாற்றம்..! அன்று பீலா ராஜேஷ்.. இன்று ராதாகிருஷ்ணன்!
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெயர் மாற்றத்திற்காக மனு அளித்து, அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழிக்க படுவதை தொடர்ந்து, அதுகுறித்த தகவல்களை பதாகை எழுதி தனது உடம்பில் அணிந்துகொண்டு பல நூறு கிலோ மீட்டர்கள் சென்று முதல்வரை சந்தித்து நீதி கேட்கப் போவதாக நடைபயணம் மேற்கொண்டுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காணவும், பின்தொடரவும் ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.