13 வயது சிறுமி சந்தேக மரணம் - குற்றவாளிகளை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் உடல்கூறு ஆய்வுக்கு பின் உடல் எடுத்து வரப்பட்ட அமரர் ஊர்தியை தடுத்து நிறுத்தி குற்றவாளிகளை கைது செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வில்லியநல்லூர் தெற்குதெருவைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் 13 வயதான ஷோபனா. 9ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி ஷோபனா நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அதே பகுதியில் வசிக்கும் மாமா பாலசுப்ரமணியன் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக சென்றவர், அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சிறுமியை பல்வேறு பகுதியில் தேடிய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவர் எங்கு கிடைக்காததை அடுத்து குத்தாலம் காவல் நிலையத்தில் சிறுமியை புகார் அளித்தனர்.
இந்நிலையில் சிறுமியை தொடர்ந்து தேடி உறவினர்கள் மாமா பாலசுப்ரமணியன் வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் இல்லாத வாய்க்காலில் சிறுமி சந்தேகமான முறையில் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து சிறுமியின் உறவினர்கள் குத்தாலம் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து அங்கு விரைந்த குத்தாலம் காவல்துறையினர். சிறுமியின் உடல் அருகில் சென்று பார்த்ததில் சிறுமி அணிந்திருந்த லெக்கின்ஸ் பேண்ட் கிழிந்து ரத்தக்கரையுடன் காணப்பட்டுள்ளது. இருந்ததால் சிறுமி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ள குத்தாலம் காவல் துறையினர் சிறுமியின் உடலை வாய்க்கால் இருந்து மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும், இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டர். இதுதொடர்பாக காவல்துறையினர் சில இளைஞர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் உடல்கூறு ஆய்வு செய்யப்பட்ட சிறுமியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக திருவாரூர் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு அமரர் ஊர்தியில் கொண்டு வரப்பட்டது. இதனை அறிந்த கிராம மக்கள் குத்தாலம் அஞ்சாறு வார்த்தலை பகுதியில் அமரர் ஊர்தியை வழிமறித்து கொட்டும் மழையில் சிறுமியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பூம்புகார் - கல்லணை சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் சம்பவ இடத்திற்கு சென்று 2 நாட்களில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாக உறுதியளித்தார். அதன்பேரில் கிராம மக்கள் சாலைமறியலை கைவிட்டு உடலை எடுத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது - கணவன் மனைவி உயிரிழப்பு