மேலும் அறிய
மதுரையில் ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது - கணவன் மனைவி உயிரிழப்பு
’ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டடு, கணவன் மனைவி உயிரிழந்தனர் என தெரியவருகிறது. எனினும் வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்குமா என விசாரணை நடத்திவருகிறோம்” என தெரிவித்தனர்

உயிரிழந்த_தம்பதி
மதுரை ஆணையூர் அடுத்த எஸ்.வி.பி் நகர் பியர்ல் ரெசிடன்சி 3 ஆவது குறுக்குதெரு பகுதியில் சக்தி கண்ணன் என்பவர் தனது மனைவி மற்றும் தனது இரு பிள்ளைகளுடன் வாடகை வீட்டில் வசித்துவந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு பிள்ளைகள் இருவரும் கீழே உள்ள அறையில் உறங்கிய நிலையில் மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர். நள்ளிரவில் வீட்டு அறையில் உள்ள ஏசியில் திடிரென மின் கசிவு ஏற்பட்ட நிலையில் புகை உருவாகியுள்ளது. இதனால் அறையினுள் இருந்து இருவரும் வெளியே வர முயன்ற நிலையில் தீ பற்றி எரிய தொடங்கி நிலையில் இருவரது உடலிலும் தீப்பற்றி எரிந்து இருவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர்.

இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இதனையடுத்து தொடர்ந்து தீ பற்றி எரிந்த நிலையில் சக்தி கண்ணனின் மகன் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலையடுத்து தீயை அணைத்து உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து கூடல் புதூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சக்தி கண்ணனுக்கு 17 வயதில் காவியா என்ற பெண் குழந்தையும், கார்த்திகேயன் என்ற மகனும் உள்ளனர். வீட்டு அறையில் உறங்கிகொண்டிருந்த தம்பதியினர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Kamalam Paati | 8 ரூபாய்க்கு கருப்பட்டி ஆப்பம்.. கமலம் பாட்டியின் ஓய்வறியா உழைப்பும், புன்னகையும்..!
இது குறித்து கூடல் புதூர் காவல்துறையினர் கூறுகையில், ”ஏசியில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டு, கணவன் மனைவி உயிரிழந்தனர் என தெரியவருகிறது. எனினும் வேறு ஏதேனும் பிரச்னைகள் இருக்குமா என விசாரணை நடத்திவருகிறோம் என தெரிவித்தனர். இது குறித்து உயிரிழந்த தம்பதியின் உறவினர்கள் கூறுகையில், ‘’கணவன் - மனைவி இருவரும் உயிரிழந்த செய்தியை நம்ப முடியவில்லை. இரண்டு குழந்தைகளுக்கும் என்ன ஆறுதல் சொல்லப்போகிறோம் என தெரியவில்லை. பெற்றோரை இழந்து தவிக்கும் இரு குழந்தைகளுக்கும் அரசு உதவி செய்ய வேண்டும்” என தெரிவித்தனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - 'என் தங்கத்த காணோமே’ : 60 நாய்களுக்கு சரணாலயம்.. வீட்டைச்சுற்றியே சமாதிகள்.. ஆச்சரியம் தரும் முதியவரின் கதை !
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
க்ரைம்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion