மேலும் அறிய

ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்த மீனவர்கள்!

சுருக்கு மடி வலைக்கு அனுமதி வழங்கக் கோரி, மீனவர்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்து போராட்டம்.

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதால், மீனவா்களிடையே பல்வேறு பிரச்னைகள் மற்றும் மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், மீன்வளமும் அழிக்கப்படும் சூழ்நிலை உள்ளது.


ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்த மீனவர்கள்!

இதைக் கருத்தில்கொண்டே மீனவா்கள் சுருக்கு மடி, இரட்டை மடி உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட  வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தொழிலில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தி வருகிறது. மேலும், மீனவா்கள் எவரேனும் தடை செய்த மீன்பிடி வலையான சுருக்கு மடி வலை, இரட்டைமடி வலைகள் வைத்திருந்தால், சம்பந்தப்பட்ட மீன்வளத் துறை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு ஒப்படைக்கத் தவறும் பட்சத்திலும், எதிா்வரும் காலங்களில் தடைசெய்த மீன்பிடி வலையான சுருக்குமடி வலை மற்றும் இரட்டைமடி வலைகளைக் கொண்டு மீன் பிடிப்பது தெரியவரும் பட்சத்திலும், தடைசெய்யப்பட்ட இந்த வலைகளை மறைமுகமாக பெரிதும் லாபம் தரும் நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மீனவா்களுக்கு விற்பனை மற்றும் விநியோகம் செய்வோா் மீதும் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-இன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்த மீனவர்கள்!

இந்நிலையில், மீன்பிடி ஒழுங்கு முறை சட்டம் படி தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்டுள்ள 21 வகையான மீன்பிடி ஒழுங்குமுறையை நடைமுறை படுத்தாமல் சுருக்குமடி வலையை மட்டும்  தடை செய்துள்ளதாகவும். தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும்  மற்ற மீனவர்களுக்கு அரசு அனுமதித்து வருவதாகவும். எனவே, சுருக்கு மடி மீனவர்களையும் கடலுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என கூறி மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த சுருக்கு மடி வலை பயன்படுத்தும் மீனவர்கள் அவர் அவர் கிராமங்களில் கடந்த மூன்று தினங்களாக தொடர்  உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்த மீனவர்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார், திருமுல்லைவாசல், மடவாமேடு, சந்திரபாடி உள்ளிட்ட 4  இடங்களில்  15 கிராமங்களை சேர்ந்த  ஆயிரக்கணக்கான மீனவர்கள் சுருக்கு மடி வலை அனுமதி கோரி மூன்றாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்துள்ள நிலையில் நேற்று  இரவு மீன்வளத்துறை திகாரிகள் மத்தியில் நடைபெற்ற இரண்டுகட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதனையடுத்து மூன்றாவது நாள் போராட்டமாக இன்று அந்தந்த கிராமங்களில் இருந்து நடைபயணமாக சென்று சீர்காழி தாலுக்கா அலுவலகம் மற்றும் தரங்கம்பாடி தாலூக்கா அலுவலங்களில் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,  ஒப்படைக்கும் போராட்டத்திற்கு மீனவர்கள் பேரணியாக புறப்பட்டனர் . இதனால் மீனவ கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்த மீனவர்கள்!

திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் இருந்து தங்கள் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை சீர்காழி வட்டாட்சியரிடம் ஒப்படைக்க 3000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பேரணியாக சென்றனர். அவர்களை காந்தி நகர் என்ற பகுதியில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்படாததை அடுத்து அவர்கள் மீண்டும் பேரணியை தொடங்கினர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த துணை வட்டாட்சியரிடம் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டைகளை ஒப்படைத்தனர்.


ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்த மீனவர்கள்!

முன்னதாக பூம்புகார் மீனவர்கள் பூம்புகார் கடற்கரையில் உள்ள கண்ணகி சிலையிடம் தங்களது கோரிக்கை மனு அளித்தனர். அதனைத்தொடர்ந்து பெண்கள் உட்பட 2000 மீனவர்கள் அங்கிருந்து நடந்து பேரணியாக புறப்பட்டனர். அவர்களை காவிரிப்பூம்பட்டினம் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து மீனவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசாரையும் மீறி மீண்டும் பேரணியாக சீர்காழி நோக்கி செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு வந்த வருவாய் கோட்டாட்சியர் நாராயணன் மற்றும்  தாசில்தார் சண்முகம் காவல் துணை கண்காணிப்பாளர் லாமேக் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மீனவர்கள் தங்களது குடியுரிமை அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். 


ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைத்த மீனவர்கள்!
மடவாமேடு, பழையாறு,கொட்டாய்மேடு சந்திரபாடி உள்ளிட்ட 15 கிராம மீனவர்கள் அந்தந்த பகுதி வருவாய்த்துறை   அலுவலர்களிடம் தங்களது குடியுரிமை அடையாள அட்டை, ஆதார், ரேஷன் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை ஆகியவற்றை ஒப்படைத்தனர். மேலும் தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை தங்கள் உண்ணாவிரத போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget