மேலும் அறிய

ஹரித்ரா நதி என்றழைக்கப்படும் மன்னார்குடி கோயில் குளம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் பெருமைக் கொடியை மேலும் உயர்த்துகிறது ராஜகோபால சுவாமி கோயில் குளமான மன்னார்குடி தெப்பக்குளம்.

தஞ்சாவூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் பெருமைக் கொடியை மேலும் உயர்த்துகிறது ராஜகோபால சுவாமி கோயில் குளமான மன்னார்குடி தெப்பக்குளம். இதற்கு இன்னொரு பெயர் இருக்கு. ஹரித்ரா நதி என்று அழைக்கின்றனர். 

தமிழகம் எப்போதும் வரலாற்று பெருமைகளை உள்ளடக்கியது. கோயில்கள் மட்டுமின்றி பல்வேறு வகையிலும் தன்னகத்தே ஏராளமான பொக்கிஷம் போன்ற பெருமைகளை கொண்டுள்ளது. திரும்பும் இடம் எல்லாம் ஸ்பெஷல்தான். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் பெருமைக் கொடியை மேலும் உயர்த்துகிறது ராஜகோபால சுவாமி கோயில் குளமான மன்னார்குடி தெப்பக்குளம். இதற்கு இன்னொரு பெயர் இருக்கு. ஹரித்ரா நதி என்று அழைக்கின்றனர். என்னங்க தெப்பக்குளம் என்று சொல்றீங்க நதின்னு சொல்றீங்க என்ற கேள்வி எழலாம்.


ஹரித்ரா நதி என்றழைக்கப்படும் மன்னார்குடி கோயில் குளம்

முன்பு நறுமணமிக்க செண்பகமரங்கள் நிறைந்த காடாக இந்த ஊர் இருந்துள்ளது. பின்னர் நிலத்தை திருத்தி நாடாக்கி உள்ளனர். அதனால்தான் மன்னார்குடிக்கு செண்பகாரண்யம் என்ற பெயரும் உண்டு. இதுமட்டுமின்றி சுத்தவல்லி வளநாடு, ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம்,  குலோத்துங்க சோழ விண்ணகரம், ராஜேந்திர சோழ விண்ணகரம்,  வாசுதேவபுரி, தட்சிணதுவாரகா, வண்டுவராபதி, சுயம்புத்தலம், மன்னவர்குடி,  ராஜமன்னார்குடி என்று பல பெயர்கள் உண்டு.

நதி போன்றுதான் இக்குளம் அமைந்துள்ளது. இதன் காரணப்பெயரை பற்றி அறிந்து கொள்வோம். மன்னார்குடி வரும் பக்தர்களும் சரி, சுற்றுலாப்பயணிகளும் சரி ஹரித்ரா நதி என்கிற இந்த தெப்பக்குளத்தை கண்டு பிரமித்துதான் போய்விடுவார்கள். கோவில்பாதி, குளம்பாதி என்ற பழமொழிக்கு உரித்தான ஊர்தான் மன்னார்குடி. முன்பு மன்னார்குடியில் மொத்தம் 98  குளங்கள் இருந்துள்ளது. என்னங்க ஆச்சரியமாக இருக்கிறதா. உண்மைதான். தற்போது பாதிக்குமேல் இல்லை.

இருப்பினும் மன்னார்குடியில் இன்றும் நுழையும் தெருக்களிலெல்லாம் குளம் இருக்கிறது. இதை வைத்தே மன்னார்குடியின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம். இவற்றிற்கு எல்லாம் சிகரம் வைத்தது போன்றதுதான் மன்னார்குடி தெப்பக்குளம்.

கோபிலர், கோப்பிரளயர் என்ற இரண்டு முனிவர்களுக்கு பரந்தாமன் கண்ணனாக காட்சி அளித்தார். குளத்தில் கண்ணன் கோபிகையருடன் குளித்துக் கொண்டு இருந்த போது அந்த கன்னிகையரின் உடலில் பூசிய மஞ்சள் (ஹரித்ரா) மற்றும் நறுமணப் பொருட்கள் இக்குளத்தின் தீர்த்தத்தில் படிந்தபடியால் இக்குளம் ஹரித்ரா (மஞ்சள்) என்ற காரணப்பெயரில் அழைக்கப்படுகிறது.

இக்குளம் காவிரியின் மகள் என்றும், 66 கோடி புண்ணிய தீர்த்தங்கள் ஒன்று சேர்ந்தது என்றும் புராண வரலாறு கூறுகின்றன. மன்னார்குடி ராஜகோபால சுவாமிக்கு தினமும் திருமஞ்சன தீர்த்தம் இக்குளத்தில் இருந்து தான் எடுத்துச்செல்லப்படுகிறது.

இக்குளத்தில் வைகாசி, ஐப்பசி, மாசி, பங்குனி மாதங்களிலும் அமாவாசை, பவுர்ணமி, கிரகண காலங்களிலும் ரோகிணி, திருவோண நாட்களிலும் நீராடினால் கண்ணபிரானின் திருவருள் கிடைக்கும் என்றும், மாசி மாதம் முழுவதும் நீராட முடியாமல் போனாலும் கடைசி மூன்று நாட்களாவது நீராடினால் சிறப்பு உண்டு.

மற்ற புண்ணிய தலங்களில் 1 கோடி ஆண்டுகள் இருந்து பெறும் பலனை, ஹரித்ரா நதி கரையில் ஒரு ஆண்டில் அடையலாம் என்று புராணம் கூறுகிறது. பிருகு முனிவர் வேண்டுகோளுக்கு இணங்கி காவிரியை பெரிய குளமாக தேக்கி அதில் ராஜகோபாலன் குளித்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவின் பெரிய தெப்பக்குளம்  என்றால் அது மன்னார்குடி ஹரித்ரா நதி என்கிற தெப்பக்குளம்தான்.  1,158 அடி நீளமும், 847 அடி அகலமும், 23 ஏக்கர் பரப்பளவும் கொண்டது. இந்த மன்னார்குடி தெப்பக்குளம். பிரமாண்டமாக காட்சி அளிக்கும் இந்த தெப்பக்குளத்தை பார்ப்பதற்காகவே பல மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

குறைந்த விதை... குறைந்த தண்ணீர்... ஏக்கருக்கு 76 டன் கரும்பு: நவீன சாகுபடி முறையை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை
குறைந்த விதை... குறைந்த தண்ணீர்... ஏக்கருக்கு 76 டன் கரும்பு: நவீன சாகுபடி முறையை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை
சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் இறந்த தஞ்சாவூர் செவிலியர் உடலை மீட்க உறவினர்கள் கதறல்!
சவுதி அரேபியாவில் நடந்த கோர விபத்தில் இறந்த தஞ்சாவூர் செவிலியர் உடலை மீட்க உறவினர்கள் கதறல்!
ஒரத்தநாட்டில் களைகட்டிய நாய்கள் கண்காட்சி... 200-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு
ஒரத்தநாட்டில் களைகட்டிய நாய்கள் கண்காட்சி... 200-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்பு
589 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் – தூய்மை, நீர்நிலைகள் பாதுகாப்புக்கு கலெக்டர் ரேவதி வலியுறுத்தல்
589 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் – தூய்மை, நீர்நிலைகள் பாதுகாப்புக்கு கலெக்டர் ரேவதி வலியுறுத்தல்

வீடியோ

Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
Navalpattu Viji : ’காங்கிரஸ் எம்.பியிடமிருந்து மெழுவர்த்தியை தட்டிவிட்டது ஏன்?’ தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி பரபரப்பு பதில்..!
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
Embed widget