மேலும் அறிய

இனி இதுதான் ஒரிஜினல்... புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி லோகோ

மணப்பாறை முறுக்கு திருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக புவிசார் குறியீடு பெற்ற பொருளாகும். இதற்காக 2014-ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டு 2023ல் புவிசார் குறியீடு பெறப்பட்டது.

தஞ்சாவூர்: பிரபலமான நொறுக்குத் தீனியான மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு கிடைத்ததை அடுத்து அதற்கான தனி லோகோ வெளியிடும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடந்தது. 

தஞ்சாவூர் சுலோச்சனா - பன்னீர்செல்வம் அறிவுசார் சொத்துரிமை விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மையம் சார்பில், மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட நிகழ்வாக மணப்பாறை முறுக்கிற்கு என்று தனி லோகோவெளியிடும் நிகழ்ச்சி தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் சென்னை உயர்நீதிமன்ற அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி மணப்பாறை முறுக்கு பாக்கெட்டில் அச்சிடப்பட்ட லோகோவை வெளியிட, மணப்பாறை முறுக்கு தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் சேகர் பெற்றுக் கொண்டார்.


இனி இதுதான் ஒரிஜினல்... புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்குக்கு தனி லோகோ

மணப்பாறை முறுக்கு திருச்சி மாவட்டத்தில் முதன் முதலாக புவிசார் குறியீடு பெற்ற பொருளாகும். இதற்காக 2014-ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டு 2023ல் புவிசார் குறியீடு பெறப்பட்டது. தற்போது அதற்கான தனி லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி மணப்பாறை முறுக்கு பொட்டலங்களில் இந்த லோகோ ஸ்டிக்கர் மூலம் ஒட்டப்படுவதால், பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். இதனால் மணப்பாறை முறுக்குக்கு பாரம்பரிய தயாரிப்பாளருக்கு விற்பனை அதிகரிக்கும், உரிய விலை கிடைக்கும். இந்த பெயரையோ, முத்திரையையோ யாரேனும் தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியாவில் இதுவரை 692 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 69 பொருட்களில் 55 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நிகழ்ச்சிக்கு பின்னர் சென்னை உயர்நீதிமன்ற அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் ப.சஞ்சய்காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: 

திருச்சி மாவட்டம், மணப்பாறை முறுக்கு தனிச் சிறப்பான சுவையுடைய, அனைவராலும் விரும்பப்படும் நொறுக்குத் தீனி. பரம்பரை குடிசைத் தொழிலாக வளர்ந்துள்ள இந்த மணப்பாறை முறுக்கை சட்ட ரீதியாக பாதுகாப்பதற்காக, சுலோச்சனா - பன்னீர்செல்வம் அறிவுசார் சொத்துரிமை விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மையம் ஆய்வு செய்தது. இதனுடைய தனித்துவம், தனி வரலாறு, சிறப்பு, தயாரிக்கும் முறை, விற்பனை முறை ஆகியவற்றுடன் புவிசார் குறியீடு பெறுவதற்காக 2014 ஆம் ஆண்டில் விண்ணப்பிக்கப்பட்டு 2023ம் ஆண்டில் மணப்பாறை முறுக்குக்கு புவிசார் குறியீடு அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான தனி லோகோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் முழுப் பயனையும் பாரம்பரிய முறுக்கு தயாரிப்பாளர்கள் பெறும் வகையில், இந்தத் தனி லோகோ வெளியிடப்பட்டுள்ளது. விற்பனை செய்யப்படும் அனைத்து மணப்பாறை முறுக்கு பாக்கெட்டுகளிலும் இந்தத் தனி லோகோ இடுவதன் மூலம் போலிகள் நுழைவதைத் தடுக்க முடியும். இதனால், நுகர்வோர்களும் சரியான நபரிடம் தரமான பொருளைக் கண்டறிந்து வாங்குவர். இதன் மூலம் உண்மையான பாரம்பரிய தயாரிப்பாளருக்கு விற்பனை அதிகரித்து, உரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்தப் பெயரையோ,  லோகோவையோ வேறு யாரேனும் தவறாக பயன்படுத்தினால், அவர்கள் மீது சட்டப்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், சீரக சம்பா, தஞ்சாவூர் கண்ணாடி கலைப்பொருட்கள் (கட் கிளாஸ் வொர்க்), திருவாவடுதுறை சீவாலி, சிவகாசி பட்டாசு, சிவகாசி தீப்பெட்டி ஆகிய 5 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கும் விரைவில் கிடைத்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget