மேலும் அறிய

தொழிலாளர் தினம்: தஞ்சை முழுவதும் ஒற்றுமை முழக்கம்

தஞ்சாவூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநகரச் செயலாளர் வடிவேலன் தலைமையில் மே தினக்கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சாவூர்: "வியர்வை சிந்தும் கரங்களே தேசத்தை செதுக்கும் சிற்பிகள்" என்பதை பறைசாற்றும் வகையில், உலகத் தொழிலாளர் தினமான மே தினம் தஞ்சை மாவட்டம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. இதை ஒட்டி தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொடியேற்று விழாக்கள் நடந்தன.

தஞ்சாவூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநகரச் செயலாளர் வடிவேலன் தலைமையில் மே தினக்கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த தோழர் என்.சீனிவாசன் சிஐடியு கொடியையும், மூத்த தோழர் கோ.நீலமேகம் கட்சிக் கொடியையும் ஏற்றி வைத்தார். இதில், மாநகரக் குழு பி.சத்யநாதன், ஏ.தர்மராஜ்,  வி.அர்ஜுன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் த.முருகேசன், பாரதி புத்தகாலயம் கோதண்டபாணி, ஓய்வூதியர் சங்கம் ஆர்.பன்னீர்செல்வம், வாலிபர் சங்கம் பிரேம் குமார், மாதர் சங்க ஹேமா, செல்வி, கிளைச் செயலாளர் லூகாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 


தொழிலாளர் தினம்: தஞ்சை முழுவதும் ஒற்றுமை முழக்கம்

குருங்குளம்  கிளையில், மே தினக்கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கொடியினை  மாவட்டக் குழு உறுப்பினர் களப்பிரன் ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், ஒன்றியக்குழு சௌந்தர்ராஜன், நாகலிங்கம், எம்.விஜயக்குமார், கே.சக்திவேல், சிவா மற்றும் பலர் பங்கேற்றனர்.

இதேபோல் தஞ்சை ஒன்றியம், சர்க்கரை ஆலை கிளையில் மே தின செங்கொடியை ஒன்றியக்குழு உறுப்பினர் எம் விஜயக்குமார் ஏற்றினார். தொழிற்சங்க கொடியினை மாவட்டக் குழு உறுப்பினர் களப்பிரன் ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.சரவணன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சௌந்தர்ராஜன், நாகலிங்கம், கே.சக்திவேல் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இதேபோல், பால ஆஞ்சநேயர் கோயில், உமையவள் ஆற்காடு, சித்தாயல், அரவிந்த் கண் மருத்துவமனை கிளை ஆகிய இடங்களில் மே தினக்கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. 

சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் 140 ஆவது மே தினக் கொடியேற்று விழா நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் வி.ஆர்.கே செந்தில்குமார் தலைமை வகித்தார். சின்னக் கழனிவாசல் கிளையில் துவங்கி மருங்கப்பள்ளம், குருவிக்கரம்பை, முனுமாக்காடு, கோட்டைக்காடு, பூவாணம், சொக்கநாதபுரம், அழகியநாயகிபுரம், மல்லிப்பட்டினம் ஆகிய இடங்களில் செங்கொடி ஏற்றி மே தின தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மக்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுத்து, தொடர் போராட்டங்களை நடத்தி, வெற்றி பெறவும் சபதம் ஏற்கப்பட்டது. 

இதில் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். வழக்குரைஞர் வீ.கருப்பையா, ஒன்றியக்குழு உறுப்பினர் இளங்கோவன், கிளை செயலாளர்கள் ரங்கசாமி, சிவனேசன், வேலுச்சாமி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றத்துடன், நிகழ்ச்சிகள் நடைபெற்ற இடங்களிலும் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

பூதலூர் தெற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ஒன்றியக்குழு  எம்.ஜி.சரவணன், என்.வசந்தா, வி.அஞ்சலி தேவி, ஏ.முருகன், கே.தமிழரசன், சோலை.ரமேஷ், டி.தமிழ்செல்வன், எஸ்.மலர்கொடி, எஸ்.வியாகுலதாஸ், கே.மருதமுத்து, கே.பழனிசாமி, எல்.ராஜாங்கம், எம்.அறிவழகன் மற்றும் மூன்று குழுவினர் கோவில் பத்து, ரயிலடி, வீரமரசன்பேட்டை, ஆவாரம்பட்டி, சாணூரப்பட்டி, மனையடிப்பட்டி, அயோத்திப்பட்டி, டிபி சானிடோரியம், செங்கிப்பட்டி, சொரக்குடிப்பட்டி, வெண்டையம்பட்டி, தொண்டராயன்பட்டி, புங்கனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மே தின கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர். முன்னதாக கட்சி அலுவலகத்தில் மூத்த தோழர் முகமது சுல்தான் தலைமையில் கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
ஏரியை தூர்வார 2,000 ஆண்டுகளுக்கு முன்பே சோழர்கள் பயன்படுத்திய ‘குமிழித்தூம்பு’
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்
சாய்ந்து கொண்டே வரும் மின்கம்பங்கள்: விபத்து அச்சத்தில் வெள்ளாம்பெரம்பூர் விவசாயிகள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget